மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
14 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
14 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
14 hour(s) ago
மொகதிசு: சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள பிர பலமான லிடோ கடற்க ரையில் நேற்று முன்தினம் இரவு பொது மக்கள் அதி களவில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அல் - ஷபாப் பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலைப்படைதாக்குதல் நடத்தினார். மேலும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலரும் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூரமான தாக்குதலில், 32 பேர் உயிரிழந்தனர். மேலும்,60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது. பதிலுக்கு, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல் லப்பட்டனர். லிடோ கடற்கரையில் மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு, அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, அல்குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது.சோமாலியாவில் தற்போதுள்ள அரசு, மிகவும் பலவீனமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் நிர்வாகத்தை நடத்தி வருகிறது. பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெரிதும் சார்ந்துள்ளது.இதை கவிழ்ப்பதற்காக, அல் - ஷபாப் பயங்கரவாதிகள் தொடர்ந்து சோமாலியாவில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago