உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியது கிளர்ச்சிப்படை; விமானத்தில் தப்பினார் சிரியா அதிபர் ஆசாத்

டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியது கிளர்ச்சிப்படை; விமானத்தில் தப்பினார் சிரியா அதிபர் ஆசாத்

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த இஸ்லாமிய கிளர்ச்சி படையினர், டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டோம் என்றும், அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார் என்றும் அறிவித்துள்ளனர்.மத்திய கிழக்கு நாடான சிரியாவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல்- ஆசாத், ரஷ்யா, ஈரான் நாடுகளுடன் இணைந்து செயல்படுவதால், அவரது அரசை ஒழிக்க, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், துருக்கியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கென, பயங்கரவாதிகளை தூண்டிவிட்டும், ஆயுதங்களை கொடுத்தும் உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wy52a7d3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் சிரியாவில் 2015ல் தீவிரமாக நடந்த போர், அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சிரியாவுக்கு உதவ ரஷ்ய ராணுவம் நேரடியாக களம் இறங்கியது. ரஷ்யாவின் முப்படைகளும் சிரிய கிளர்ச்சி படைகள் மீது தாக்குதல் தொடங்கின. அதை சமாளிக்க முடியாமல், கிளர்ச்சிப் படையினர் ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சி தோல்வியுற்றது. இந்நிலையில், உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானும் இஸ்ரேல் உடனான மோதல் காரணமாக, படைகளை அனுப்ப முடியாத சூழலில் உள்ளது. சிரியா அதிபருக்கு ஆதரவாக போரிட்டு வந்த ஹிஸ்புல்லா படைகளும் இஸ்ரேல் தாக்குதலில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.இத்தகைய சிக்கலான சூழ்நிலையில், அதிபர் ஆசாத்துக்கு எதிராக புதிதாக உருவான கிளர்ச்சிப்படை, துருக்கி ராணுவத்தின் ஆதரவுடன் முழு வீச்சில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் சிரியாவின் முக்கிய நகரங்களான அலப்பே, ஹோம்ஸ் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் கிளர்ச்சிப்படை வசமாகிவிட்டன. இந்த நகரங்களை பாதுகாத்து வந்த சிரியா அரசு படையினர், ஆயுதங்களை கீழே போட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கிளர்ச்சிப் படையினர், சிரியா தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றினர். உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான டமாஸ்கஸ், இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி, கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரும் ஒன்றாக வசித்த நகரம். ஏராளமான புராதன சின்னங்களைக் கொண்டுள்ள நகரம்.கிளர்ச்சிப் படைகளின் ஒரு பிரிவு டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டதாகவும் அறிவித்துள்ளது. தலைநகரில் புகுந்துள்ள கிளர்ச்சிப் படைகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அதன் தலைவர் அறிவித்துள்ளதாக சி என் என் செய்தி வெளியிட்டுள்ளது. வெற்றியைக் கொண்டாடும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் கூடாது, பொது சொத்துக்களை சேதம் செய்யக் கூடாது என்று கிளர்ச்சிப்படை தளபதி அறிவித்துள்ளார்.இதற்கிடையே, சிரியா அரசு படைகளுக்கு ஆதரவாக, ஈரான், ஹிஸ்புல்லா படைகள் வருமா, ரஷ்ய படைகள் வருமா, அரசு படைகள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது பற்றி தெளிவில்லாத சூழல் நிலவுகிறது.

ஓட்டம்

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிப் படை டமாஸ்கஸ் நகரில் நுழைந்துள்ள தகவல் வெளியான நிலையில், அதிபர் ஆசாத் விமானத்தில் தப்பி விட்டார் என்றும், அவர் ரஷ்யா அல்லது ஈரானுக்கு சென்று இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிளர்ச்சியாளர்கள் யார்?

கிளர்ச்சியாளர்களின் தலைவர் அபு முகமது அல் ஜோனி. இவர் 1982ம் ஆண்டு டமாஸ்கஸில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவர் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்; சிரியா உள்நாட்டுப் போரில், அதிபருக்கு எதிராக இஸ்லாமிய படைகளுடன் இணைந்து ஈடுபட்டவர்.2016ம் ஆண்டு அல்- கொய்தாவுடனான உறவுகளை முறித்து கொண்டதில் இருந்து,அபு முகமது அல் ஜோனி தன்னை மிகவும் பெரிய தலைவர் போல் சூழலை உருவாக்கினார். கிளர்ச்சியாளர்களின் தலைவர் அபு முகமது அல் கூறியதாவது: புரட்சியின் இலக்கு இந்த ஆட்சியை அகற்றுவது தான். இலக்கை அடைய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றார்.

ரஷ்யா, அமரிக்கா சொல்வது என்ன?

மாஸ்கோவின் கூட்டாளியான அதிபர் பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் பயங்கரவாத கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிரியா சிக்குவதை அனுமதிக்கக் கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.'சிரியாவில் நடந்து வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் முடிவு!

சிரியா பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி கூறியதாவது: மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தலைமையுடனும், ஒத்துழைக்க அரசு தயாராக உள்ளது. அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதில் அக்கறை கொண்ட ஒவ்வொரு சிரிய குடிமகனுக்கும் நாங்கள் ஆதரவாக செயல்படுவோம். எந்தவொரு பொதுச் சொத்துக்களுக்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று நான் அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

கிஜன்
டிச 08, 2024 21:57

நண்பர்களுக்கு ஒரு எளிய கேள்வி ... ஓடிய அதிபர் ஷியா பிரிவு என செய்திகள் கூறுகின்றன .... பெரும்பான்மையான சன்னி பிரிவு அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது ... அனைத்து நாடுகளிலும் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள் தானே ஆள்கிறார்கள் ... குட்டிநாடான ...இலங்கையில் ஒரு இந்து அதிபராக முடியுமா ? பெரும்பான்மை பவுத்தர்கள் தானே வருகிறார்கள் ... அரசியல் பகைக்கு மதத்தை ஏன் இழுக்க வேண்டும் ...


KRISHNAN R
டிச 08, 2024 20:48

வெரி sad


N.Purushothaman
டிச 08, 2024 18:45

துருக்கி ஒரு மோசமான நாடு ....அந்நாடு வரும் காலங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் .....ஐ எஸ் ஐ எஸ் ஆக்கிரமிப்பில் இருந்து தற்போது தான் சிரியா விடுபட்டு சற்று நன்றாக இருந்தது ... தற்போது கிளர்ச்சி என்கிற பெயரில் துருக்கி ராணுவம் நேரிடையாக இன்னொரு நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தி மேலும் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி விட்டது ....சிரியா ராணுவம் செய்தது மற்றொரு ராஜ துரோகம் ...கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டையே அடிமைப்படுத்திவிட்டார்கள் ....இனி என்ன ? ஐ எஸ் ஐ எஸ் மீண்டும் தலை தூக்கும் ....உள்நாட்டு கலவரம் அமைதியின்மையை ஏற்பட்டு சிரியா மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாவார்கள் ... அம்மக்களுக்கு மன உறுதியை அளிக்க எல்லாம் அல்லவனிடம் பிரார்த்தனைகள் ..


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 08, 2024 17:32

நான் முதலில் பெரியாரின் டாஸ்மாக் நகரை கைப்பற்றியது கிளர்ச்சிப்படை என்றுதான் படித்தேன். அப்புறம்தான் ஓ அது டாஸ்மாக் நகரம் இல்லை சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் என்று புரிந்து ஏமாந்துபோனேன்.


SUBBU,
டிச 08, 2024 16:45

இஸ்ரேல் மற்றும் காசா போரில் இறந்தவர்கள் மொத்தம் சுமார் 50,000 பேர். ஆனால் சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை இறந்தவர்கள் மொத்தம் ஐந்து லட்சம் பேர். சிரிய உள்நாட்டுப் போர் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் உலகத்தில் உள்ள மொத்த மனித உரிமைக் கூட்டமும் இதுபற்றி வாயை திறக்கவில்லை ஏனென்றால் அங்கே இருப்பது முஸ்லீம்கள். யூதர்களாக இருந்தால் குற்றம் சொல்ல பறந்து வருவார்கள். இதே காஸா என்றால் இஸ்ரேலிய யூதர்களின் மேல் ஈஸியாக பழியைச் சுமத்தி அவர்களை குற்றவாளி ஆக்கி விட்டார்கள். இதுதான் மத்தியக் கிழக்கில் நடக்கும் உண்மை.


MUTHU
டிச 08, 2024 19:16

இதற்கெல்லாம் உலக கோர்ட் வாயை திறக்காது.


SUBBU,
டிச 08, 2024 15:39

Tens of thousands of Christians and Druze living in Syria will be slaughtered over the coming weeks and months if they do not get out now.


magan
டிச 08, 2024 14:31

இவர்கள் மூர்க் வாழும் இருக்கும் நாடுகள் உறுபட்டதா சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை இது நடுநிலைகளுக்கு எச்சரிக்கை மணி


Sivagiri
டிச 08, 2024 13:30

ரஷ்யா - அமெரிக்கா எதிரிகள் போன்ற நண்பர்கள் - ரகசிய கூட்டாளிகள், ஆனால் ஈரான் அமெரிக்காவின் எதிரி - ஆகவே ரஷ்யாவுக்கும் ஈரான் கொஞ்சம் எதிரிதான் - ரஷ்யாவுடன் மட்டும் நட்பு கொண்டால் பிரச்சினை இல்லை - ஈரானுடன் நட்பு கொண்டால் அமேரிக்கா பகை ஆகும் - ரஷ்யா நட்பு கொள்வது போல பகை கொள்ளும் - வாய்ப்பு கிடைத்தால், அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து கொல்லும் - சூட்சுமம் புரியாமல் விளையாடினால் சகலத்தையும் இழந்து அழிவுதான் - இப்போது அமெரிக்க நட்பு கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை பிடித்தாலும், அமேரிக்கா - ரஷ்யா இருவரில் யாராவது ஒருவரிடம் நட்பு கொள்ளலாம், இருவரும் வேண்டாம் என்று போயி விடலாம், ஆனால் யாராவது ஒருவரிடம் பகை கொண்டால், அல்லது அவர்களின் பகையுடன் நட்பு கொண்டால், நிலைமை மாறும் - ஆனால் எந்த ஒரு இஸ்லாமிய கிளர்ச்சி படைகள் எப்போதும், மற்ற எல்லா இஸ்லாமிய கிளர்ச்சி படைகளுடன் நட்பு கொள்ளும் - அவர்களுக்கு இஸ்லாமிய நாடுகளை தவிர அனைவருமே, பகைவர்கள்தான் - நட்பு கொள்வது போல இருந்தாலும் பகைவர்கள்தான் - என்றேனும் ஒருநாள், வேலையை காட்டி விடுவார்கள், எப்போதும் ஜாக்ரதையாக தள்ளி வைக்க வேண்டியவர்கள்


Rpalni
டிச 08, 2024 16:06

உங்க கருத்தை படித்தேன். திருமாவின் கருத்தையும் படித்தேன். தலை சுற்றி விட்டது


Sivagiri
டிச 08, 2024 22:43

உலகில் நான்கு வகையான நாடுகள் உள்ளன - கிறிஸ்துவ - இஸ்லாமிய நாடுகள் , கிழக்கே புத்த மத கம்யூனிச நாடுகள் , இந்த மூன்றும் இல்லாத - மற்றவை இன்னும் கிறிஸ்டினாக அல்லது முஸ்லிமாக அல்லது புத்த , மதங்களுக்கு மாறாத மாற்றப்படாத நாடுகள் , அவை ஆசிய ஆப்ரிக்க தென்அமெரிக்க நாடுகள் - இந்த பிரிவில் இந்தியாவும் வருகிறது - இன்னும் முழுமையாக மதம் மாற்றப்படாத நாடு இந்தியா - அந்த மூன்று நாடுகளுக்குள்ளும் எப்போதும் போட்டி பொறாமை - போர்கள்தான் - போர்களுக்கு அடிப்படை மதம்தான் - அதோடு இயற்கை வளங்கள் -


கிஜன்
டிச 08, 2024 11:49

மார்க்கத்தின் ஐந்து தூண்களான... கலிமா... தொழுகை ...நோன்பு ... ஸகாத்... ஹஜ் ...என்பதில் வன்முறை சிறிதளவுகூட இல்லை .... தனிமனித விருப்பு வெறுப்புகளை ...மதத்துடன் தொடர்பு படுத்துவது சரியல்ல .... என அறிஞர்கள் கூறுகிறார்கள் ...


ஆரூர் ரங்
டிச 08, 2024 12:36

மன்னிக்கவும் நண்பரே. தான் கூறுவதைத்தவிர வேறு தெய்வம் எதுவுமில்லை என்கிறது ஒரு கோட்பாடு..அப்படி நம்பாதவர்களை பாவிகள் என்றழைக்கப்படுவதை ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி ஏற்க முடியும்? ஒருமுறை கூட புனித கடமை யாத்திரை செல்லாத முகலாய மன்னர்களை தங்களது முன்னுதாரண முன்னோடிகள் என்று யாராவது கூறலாமா? பிரச்சினை அந்த ஐந்தில் மீதமுள்ள நான்குமல்ல. குண்டு வசிப்பவர்களை ஒருமித்த குரலில் எதிர்க்காததுதான். அதுதானே பலரை தவறாக ஊக்குவிக்கிறது?


sridhar
டிச 08, 2024 12:37

அறிஞ்சர்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் , சரித்திரம் என்ன சொல்கிறது .


N Sasikumar Yadhav
டிச 08, 2024 13:20

ஆம் அமிதிமார்க்கம் என பீலா விட்டு கொண்டு மற்றவர்களின் அமிதியை சீர்குலைக்க ஏற்படுத்தப்பட்ட மார்க்கம்


Duruvesan
டிச 08, 2024 18:57

அதுக்கு தான் தொழுகைல கூட குண்டு வெக்கறது அந்த கூட்டம்


சுலைமான்
டிச 09, 2024 07:59

ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றிய தங்களின் கருத்து என்ன? மார்க்கத்தில் மற்ற மத வழிபாடுகளை கொச்சைப் படுத்த சொல்லிருக்கா?


Subedar Major Shenpahamurthi
டிச 08, 2024 11:38

வேர்ல்ட் பாலிடிக்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை