உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  சிரியா மசூதியில் குண்டுவெடிப்பு 8 பேர் பலி

 சிரியா மசூதியில் குண்டுவெடிப்பு 8 பேர் பலி

ஹோம்ஸ்: மேற்கு ஆசிய நாடான சிரியாவில், கடந்த ஆண்டு முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இஸ்லாமில் உள்ள சிறுபான்மை பிரிவான அலவைட் குழுவினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சிரியாவின் ஹோம்ஸ் நகர், அலவைட் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதி. இங்குள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் நேற்று தொழுகை நடந்தது. அப்போது மசூதியின் உள்ளே ஒரு பகுதியில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை