உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்; 20 பேர் பலி; 52 பேர் படுகாயம்!

சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்; 20 பேர் பலி; 52 பேர் படுகாயம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 52 பேர் பலத்த காயம் அடைந்தனர்.மேற்கு ஆசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேவாலயத்தில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மீனவ நண்பன்
ஜூன் 23, 2025 18:33

இந்த கிறித்துவர்கள் கத்தோலிக்கர் இல்லை ..இவர்களுக்கும் அமேரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எந்த தொடர்பும் கிடையாது.


Kulandai kannan
ஜூன் 23, 2025 14:19

இந்த நாடுகளிலெல்லாம் மத நல்லிணக்கத்தை போதிக்க, matrum யாரும் இல்லையா?


S.L.Narasimman
ஜூன் 23, 2025 12:39

இப்படி ஒருவருக்கொருவர் குண்டு வைத்து கொல்வது இந்த இரு மதத்துகாரர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு போல இரூக்கிறது. மதவெறியின்றி மனிதனாக மாறுங்கள் .


Sudha
ஜூன் 23, 2025 11:54

இந்த நாடுகள் இருந்தால் என்ன ஒழிந்தால் என்ன


Kulandai kannan
ஜூன் 23, 2025 10:41

தமிழகத்தில் அவ்விருவரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, ஏனென்றால்.....


R S BALA
ஜூன் 23, 2025 10:02

உயிரின் மதிப்பறியாமல் மதம் வளர்த்து என்ன செய்யப்போகிறார்கள்...


Nada Rajan
ஜூன் 23, 2025 09:45

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்


Krishnamoorthy Perumal
ஜூன் 23, 2025 09:45

இஸ்லாமிய பயங்கரவாதிகள் கோழைகள்


hasan kuthoos
ஜூன் 23, 2025 15:05

பயங்கரவாதிகள் எல்லாமே கோழைகள் தான் ,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை