உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டனில் எம்.பி., ஆன தமிழ் பெண்

பிரிட்டனில் எம்.பி., ஆன தமிழ் பெண்

லண்டன்: பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி., ஆகியுள்ளார்.இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமாரன் பெற்றுள்ளார். அவருக்கு லண்டன் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இலங்கையில் வசித்த இவரது பெற்றோர், போரின் போது லண்டனுக்கு இடம்பெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், அரசியல் இளநிலை பட்டம் பெற்றார். 2020 ல் கெய்ர் ஸ்டார்மரின் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ ஹட்சன் 7.511 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஜூலை 05, 2024 20:49

இவருக்கு இந்நாட்டில் விரைவில் துணை பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன


Easwar Kamal
ஜூலை 05, 2024 17:30

வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் பல வந்தேறிகள் அமைச்சர் மற்றும் mp பதவி நம் தமிழ் நாடும் தமிழக மக்களும் வாய்ப்பு கொடுத்து உள்ளனர். நாம் பெருந்தன்மையாக உள்ளதால் இப்ப்போது நம் தமிழ் மக்கள் பல நாடுகளில் அரசியல் வாழ்வில் உள்ளனர். வீரவேற்க thakadhu.


duruvasar
ஜூலை 05, 2024 14:53

கமலா ஹைரிஸுக்கு தமிழில் வாழ்த்து கடிதம் எழுதியவரின் கைகள் மீண்டும் பரபரக்கும் என எதிர்பார்க்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 05, 2024 21:05

பின்ன ?? வாழ்த்தும் சொல்லியாச்சு ...... ஆனா அந்தம்மா பதிலுக்கு "நீங்க யாரு? உங்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?" ன்னு கேட்டுட்டா ????


Duruvesan
ஜூலை 05, 2024 14:33

ஆக இப்போ தெரிதா ஏன் விடியல் அங்க குடுப்பத்தோட போனார்னு, விடியல் பிரச்சாரம் ஆக தமிழ் பெண் வெற்றி


S Ramkumar
ஜூலை 05, 2024 14:31

ஈழ தமிழ் பெண் என்று போடுங்கள்


umari siva
ஜூலை 05, 2024 14:20

வாழ்த்துக்கள் , எங்கள் தமிழ் சொந்தமே, தென்பாண்டி மண்டல உமரி மாநகர் மக்களின் அன்பு பாராட்டுக்கள்.


Palanisamy Sekar
ஜூலை 05, 2024 14:00

அண்ணன் சீமானின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே உள்ள தமிழர்களின் ஓட்டுக்களால் இவர் எம்பி ஆனார் என்கிற ரீல் இனி எங்குபார்த்தாலும் சுழன்றுகொண்டே இருக்கும். இனி லண்டனில் யாராச்சும் குடியுரிமை வேண்டும் என்றால் அண்ணன் சீமானிடம் கடிதம் வாங்கிக்கொண்டு இவரிடம் சென்றால் ஓரிரு நாளிலேயே அங்கே குடியுரிமை கிடைத்துவிடும். சீமான் வேற லெவல் . சிரிக்க அல்ல இந்த செய்தி.


Senthoora
ஜூலை 05, 2024 14:56

சீமானை நம்பி இலங்கை மக்கள் இல்லை.


S George
ஜூலை 05, 2024 16:55

நல்லது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை