உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதிகள் தாக்குதல் பாக்.,கில் 50 பேர் பலி

பயங்கரவாதிகள் தாக்குதல் பாக்.,கில் 50 பேர் பலி

பெஷாவர், பாகிஸ்தானில் பயணியர் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், பெஷாவர் மற்றும் பராசினார் இடையேயான சாலையில், பயணியரை ஏற்றிச்சென்ற மூன்று வாகனங்கள் மீது, சாலையின் இருபுறமும் நின்றபடி, நேற்று, 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில், வாகனங்களில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட, 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தாக்குதல் நடந்த பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை