உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: மேலும் ஒரு ஹிந்து தீ வைத்து எரிப்பு

 வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: மேலும் ஒரு ஹிந்து தீ வைத்து எரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், மேலும் ஒருவரை தாக்கி தீ வைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு வெடித்த மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது அங்கு , நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. நாட்டின் தலைமை ஆலோசகராக இவர் பதவியேற்றது முதலே, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. வங்கதேசத்தில் அடுத்த மாதம் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 18ம் தேதி வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. வங்கதேசத்தில் உள்ள 30 மாவட்டங்களில், 70க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில், மூன்று ஹிந்துக்கள் கொல்லப்பட்ட நிலையில் , நேற்று முன்தினம் மேலும் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார். ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொகோன் தாஸ், 50, என்பவர் தன் வீட்டிற்கு சென்றபோது, வழிமறித்த கும்பல் ஒன்று, கூர்மையான ஆயுதங்களால் அவரை தாக்கியது. பின், தாசை தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடியது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டுக்கு முந்தைய இரவு நிகழ்ந்த இந்த தாக்குதல், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் அதிகரித்துள்ளது. இந்திய எதிர்ப்பு உணர்வை மையப்படுத்தி, வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜன 02, 2026 20:54

இனியும் மத்திய அரசு சும்மா இருப்பது சரியல்ல. வங்கதேசத்துக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை கொடுக்கவேண்டும். பிறகும் அட்டூழியம் தொடர்ந்தால், பாகிஸ்தான் மீது நடத்தியது போன்று ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி, வங்கதேசத்துக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். மயிலே மயிலே என்றால் அது இரகு போடாது.


N.Purushothaman
ஜன 02, 2026 12:11

காட்டுமிராண்டிகள் ...துரோகிகள் ....வன்முறையாளர்களை கண்டறிந்து பட்டியலிட்டு அவனுங்களை தூக்க வேண்டும் ....


Rathna
ஜன 02, 2026 10:47

பாலைவனம் என்பது இரக்கம் இல்லாத தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத பகுதி. அங்கே ரத்தத்தின் மதிப்பை விட தண்ணீரின் மதிப்பு அதிகம். அங்கே வளர்ந்த ஒரு சமூகம் 1000 வருடங்களுக்கு மேல் செய்யும் அநியாயம் தொடர தான் செய்யும். அது தான் உலகம் முழுவதும் நடக்கிறது. இந்தியா அந்த நாட்டை பிரித்தால் மட்டுமே அது குறைய வாய்ப்பு உள்ளது.


Anand
ஜன 02, 2026 10:40

இங்குள்ள சிறுபாண்மை முட்டுக்கொடுக்கிஸ் சத்ததேயோ காணோம், இருக்கனுங்களா இல்லையா?


Thirumal Kumaresan
ஜன 02, 2026 09:44

இந்தியா ஏதாவது நல்ல முடிவை சீக்கிரம் எடுக்க வேண்டும், அப்பாவிகள் கொலை செய்வது நியாயம் ஆகாது. ஐநா சபை என்னத்துக்கு இருக்கிறது என சில சமயங்களில் கேள்விக்குறியாகிறது,


Barakat Ali
ஜன 02, 2026 11:02

ஐநா வேஸ்ட்... இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை வேண்டும்.. இந்தியாவில் உள்ள வங்கதேசத்தவர்களை வேட்டையாடி அவர்கள் நாட்டுக்கே அனுப்பவேண்டும். வங்கதேசத்தவர்களை இங்கே ஊடுருவ அனுமதித்தது குறித்து கடந்த வாரம் அமித்ஷாவும், மம்தாவும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர் ...... இது வெற்று அரசியல் ..... தீர்வு காண்பதில் இருவருக்குமே பொறுப்புள்ளது .....


Barakat Ali
ஜன 02, 2026 08:49

உண்மையைச் சொன்னால் கசக்கும்.. இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவே உள்ளனர். இது பெரும்பான்மையினரின் அன்பையும், கருணையையும் காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.. சிறுபான்மையினர் நன்றியுணர்வுடன் இருப்பது அவசியம் .....


lasica
ஜன 02, 2026 07:07

எல்லா குற்றத்தையும் சங்கிகளின் மேல்சுமத்தி கருத்து சொல்லும் மொட்டை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்


MARUTHU PANDIAR
ஜன 02, 2026 04:23

அமெரிக்காவின் ஏஜென்ட் ஆன யூனுஸ் எப்படியாவது ஒரு போரை இந்தியா மீது திணிக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறான. சிறுபான்மையினரில் இந்துக்களை மட்டும் குறிவைத்து அவங்கசீப் பாணியில் கொன்று வருகிறான். போர் வர வேண்டுமென்று துடிக்கும் பின்னணியில் நம்ம ஊர் கான்கிராஸ் மற்றும் அமெரிக்கா.


Kasimani Baskaran
ஜன 02, 2026 03:54

இவர்கள் அடக்கி ஆளப்பட்ட வேண்டியவர்கள் - ஜனநாயகம் ஒரு பொழுதும் இவர்களிடம் வேலை செய்ததாக சரித்திரம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை