மேலும் செய்திகள்
பி.பி.சி., இயக்குநர் திடீர் ராஜினாமா
7 minutes ago
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உக்டியாக்விக் நகரம், இந்த ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை நேற்று கண்டது. இப்பகுதி அதன் வருடாந்திர 'துருவ இரவு' காலத்திற்குள் நுழைந்துள்ளதால், அடுத்த 64 நாட்களுக்கு சூரிய உதயம், அஸ்தமனம் இங்கு இருக்காது. அமெரிக்காவின் வடக்கே, ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது அலாஸ்காவின் 'உக்டியாக்விக்' நகரம். இந்த நகரம், ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில், 64 நாட்களுக்கு, துருவ இரவு காலத்தில் இருக்கும். அதாவது, பூமி தன் அச்சில் சாய்ந்து இருக்கும். அந்த நேரத்தில் உக்டியாக்விக் நகரம், பூமியின் மேற்பகுதியில் அமைந்திருக்கும். அதனால், சூரிய ஒளி இந்தப் பகுதியை எட்ட முடியாது. இவ்வாறு, 64 நாட்கள் சூரிய உதயம், அஸ்தமனத்தை இந்த நகரம் பார்க்காது. அதன்படி, இந்த ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் நேற்று நடந்தது. அடுத்தாண்டு, ஜன., 22ம் தேதி வரை இது இருக்கும். இருந்தாலும் நாள் முழுதும் இருட்டாக இருக்காது. விடியற்காலைக்கு முன் வானில் தோன்றும், இயற்கையான வெளிச்சம் சில மணி நேரத்துக்கு கிடைக்கும். இந்த நகரில் கோடைக்காலத்தில், மூன்று மாதங்களுக்கு சூரியன் மறையாது. அதாவது, 24 மணி நேரமும் வெளிச்சமாக இருக்கும் என்பது மற்றொரு இயற்கையின் அதிசயம்.
7 minutes ago