உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா

ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது. ஆகையால், தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என, போர் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.இதற்கிடையே, அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் 'மினிட் மேன் - 3' ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.அணு ஆயுதம் இன்றி இந்த சோதனை நடந்ததாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் படைத்தளத்தில் இருந்து மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கை நோக்கி ஏவப்பட்டது. இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை என்றும், முன்பே திட்டமிடப்பட்டது எனவும் தெரிவித்த விமானப்படை, அதிபர் டிரம்பின் உத்தரவுக்கும், சோதனைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
நவ 07, 2025 04:05

டிரம்பருக்கும் அமெரிக்காவுக்கும் கூட தொடர்பில்லை என்று கூட அறிக்கை விடலாம்... யார் கேள்வி கேட்பது?


Ramesh Sargam
நவ 07, 2025 00:22

உலகில் அமைதியை குலைப்பவர்களுக்கு என்று ஏதாவது பரிசு இருந்தால், அதை ட்ரம்ப் அவர்களுக்கு கொடுக்கலாம்.


Senthoora
நவ 07, 2025 05:50

எதுக்கு அரை திட்டனும், அவர் சொல்து சரிதானே, சும்மா கிடந்தா செக்கும் துருபிடிக்குமாம், அதான் அவர் சொல்லவாறார், லொள்ளு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை