உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் மிரட்டல்

அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என குடியரசு கட்சி வேட்பாளர் என கருதப்படும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.ஓஹியோ மாகாணத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்கா வரலாற்றில் தேர்தல் நடக்கும் நாள் மிகவும் முக்கியமானது ஆகும். மெக்சிகோவில் கார்களை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்பனை செய்ய சீனா முயற்சித்து வருகிறது. நான் அதிபராக வெற்றி பெற்றால், இது நடக்காது. தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால், நாட்டில் ரத்தக்களறி ஏற்படும். இவ்வாறு டிரம்ப் பேசினார்.எதற்காக ரத்தக்களறி ஏற்படும் என டிரம்ப் பேசினார் எனத் தெரியவில்லை. அமெரிக்காவில் ஆட்டோ தொழில்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும் போது இவ்வாறு டிரம்ப் கூறியதால், தொழில்துறை தொடர்பாக எச்சரிக்கும் விதமாக இப்படி பேசியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
மார் 17, 2024 21:10

நம்ம ஸ்டாலினே பரவாயில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. அதற்காக அவர ஆதரித்துவிடாதீர்கள்.


PRAKASH.P
மார் 17, 2024 18:14

Is he human


Santhakumar Srinivasalu
மார் 17, 2024 13:54

அது என்ன அராஜகம் அமெரிக்காவா / பாகிஸ்தானா?


SPugazh
மார் 17, 2024 12:40

அங்குள்ள மீடியா எப்பொழுதும் ட்ரம்ப் அவர்களின் பேச்சை திரித்துதான் வெளியிடுகிறது.


Rajathi Rajan
மார் 17, 2024 12:26

நமது ஜி ஓட பெஸ்ட் பிரிண்ட் கிட்ட வேற என்ன எதிர் பார்க்க முடியும்,,,,


கர்ணன் கர்மபுரம்
மார் 17, 2024 12:22

இது தவறான தகவல்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 12:00

மோடி பிரதமரானால் இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடும் இது ராகுல் சொன்னது ..... 2014 இல் ......


கனோஜ் ஆங்ரே
மார் 17, 2024 11:50

இந்த ட்ரம்ப்... நம்ம ஊர்ல பொறந்தவர் போலிருக்கே....?


Barakat Ali
மார் 17, 2024 12:42

மெரினாவில் உறங்கும் உன் தயிர்வடை பிரியன் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பான் ....


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ