உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கர்துாம்: சூடானின் எல் - பாஷர் நகரை, துணை ராணுவப் படையான ஆஸ்.எஸ்.எப்., கைப்பற்றிய பின் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல் - பாஷர் நகரை, சூடான் ராணுவத்திடம் இருந்து, துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எப்., சமீபத்தில் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அங்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் ஏற் பட்டுள்ளதாக பல சர்வதேச அமைப்புகள் குற்றஞ் சாட்டியுள்ளன. சூடானில், சக்திவாய்ந்த இரு ராணுவ தலைமைகளுக்-கு இடையேயான அதிகாரப் போட்டியின் விளைவால் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானின் அதிகாரப்பூர்வ ராணுவ தலைவரான ஜெனர ல் அப்தெல் பத்தாஹ் அல் பூர்ஹான் தலைமையில் எஸ்.ஏ.எப்., எனும் சூடான் ஆயுத படைகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. டார்பூரில் இனப் படுகொலை செய்த ஜன்ஜாவித் போராளிக் குழுவைச் சேர்ந்த ஜெனரல் முகமத் ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., எனும் துணை ராணுவ விரைவு படைகள் செயல்பட்டு வருகிறது. இரு பிரிவினரும் இணைந்து, நீண்டகாலமாக சர்வாதிகாரியாக இருந்த ஓமர் அல் பஷீரை, 2019ல் ஆட்சியில் இருந்து அகற்றியதில் முக்கி ய பங்கு வகித்தன. இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்புக்கு பின், கடந்த 2021ல் ஜனநாயக ஆட்சிக்கு மாறுவது மற்றும் ஆர்.எஸ்.எப்.,ஐ அதிகாரப்பூர்வ ராணுவத்துடன் இணைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், 2023 ஏப்ரல் முதல் இரு தரப்பிடையேயான மோதல் முழு அளவிலான உள்நாட்டு போராக மாறியது. எல் - பஷாரில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியரு க்கு எதிராக பரவலாக பாலியல் வன்முறைகள் மற்றும் கூட்டு பாலியல் வன்முறைகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆர்.எஸ்.எப்., தாக்குதலுக்கு பயந்து 36,000க்கும் மேற்பட்ட மக்கள் கால்நடையாக அருகில் உள்ள தாவிலா போன்ற நகரங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையே, ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூடானில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைக்கு இடையிலான மோதல்களால், 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது உலகிலேயே மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக மனித நேய ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kulandai kannan
நவ 03, 2025 11:55

கிறித்தவ தென் சூடான் பல ஆண்டு ஆயுதப் படுகொலைகளுக்குப்பின் சில ஆண்டுகளுக்கு முன்தான் விடுதலை பெற்றது. இப்போது முஸ்லீம் (வடக்கு) சூடானில் உள் நாட்டுப் போர். அமைதி மதங்களின் வண்டவாளம் இதுதான்.


Kannan Chandran
நவ 03, 2025 09:34

அங்கு பல மாதங்களாக அரேபிய இஸ்லாமியர்கள் மற்ற இஸ்லாமியர்கள் ஈவு இரக்கமின்றி கொத்து கொத்தாக கொன்று குவிக்கின்றனர், காசாவுக்கு கொடிபிடித்த கூட்டம் இதை ஏன் கண்டுகொள்ளவில்லை?..


Krishna
நவ 03, 2025 07:20

Kill All Violent Goondas Ensuring People Elected Govt After Return-Safety of People by UN


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை