வாசகர்கள் கருத்துகள் ( 5 )
But why and how ?
ஓம் சாந்தி...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் . கவனிக்கவும்.
ஆழ்ந்த இரங்கல்...
ரிப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடக்கிறது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதற்காக இங்கு ஏராளமானோர் வருகின்றனர். அந்த வகையில், ஸ்வாட் ஆறு அருகே சியால்கோட் பகுதியைச் சேர்ந்த 18 பேர் இங்கு சுற்றுலாவுக்கு வந்தனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 18 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.உயிர் பிழைத்த ஒருவர் கூறியதாவது: நாங்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம், குழந்தைகள் ஆற்றின் அருகே செல்பி எடுக்கச் சென்றனர். திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றார். அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
But why and how ?
ஓம் சாந்தி...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் . கவனிக்கவும்.
ஆழ்ந்த இரங்கல்...
ரிப்