உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; 34 பேர் பலி; மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்!

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; 34 பேர் பலி; மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹானோய்: வியட்நாமின் ஹா லாங் விரிகுடாவில் ஒரு சுற்றுலாப் படகு திடீரென ஏற்பட்ட புயலால் கவிழ்ந்ததில், 34 பேர் உயிரிழந்தனர். மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.ஆசிய நாடான வியட்நாமின், தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் இன்று மதியம் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். ஹா லாங் கடலோர பகுதியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். மாயமான 8 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nada Rajan
ஜூலை 19, 2025 22:21

சுற்றுலா படகு கவிழ்ந்ததற்கு அஜாக்கிரதை காரணமாக இருக்கலாம்


Thravisham
ஜூலை 20, 2025 07:16

மிக அற்புதமான சுற்றுலா தளம் இந்த ஹா லாங் பே. இயற்கையின் சீற்றத்துக்கு முன் எவரும் ஈடாக முடியாது


முக்கிய வீடியோ