உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி

சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சீனாவின் குய்சோவு மாகாணத்தில் பலத்த காற்று வீசியதால் படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மே 1-5 வரை சீனாவின் மே தின விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒரே படகில் அதிகமானவர்கள் பயணம் செய்தது விபத்திற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை