உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நன்றியே இல்லை... அமெரிக்காவுக்கு அவமரியாதை: குற்றம் சாட்டி உக்ரைன் அதிபரை வெளியேற்றினார் டிரம்ப்

நன்றியே இல்லை... அமெரிக்காவுக்கு அவமரியாதை: குற்றம் சாட்டி உக்ரைன் அதிபரை வெளியேற்றினார் டிரம்ப்

வாஷிங்டன்: போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலை பேசியில் உரையாடினார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6okbzjqp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, உக்ரைன் அதிபரிடம் டிரம்ப் கூறியதாவது: நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள்; 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும்.ரஷ்யா உடன் போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் 3ம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு டிரம்ப் கடுமையாக சாடினார். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், 'நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். இதனால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி கிளம்பி சென்றார். வெள்ளை மாளிகையில் நடந்த வாக்குவாதத்துக்கு பிறகு செய்தி நிறுவனத்திடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 'அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்று நான் கருதுகிறேன்' என்று கூறினார்.ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, 'உக்ரைன் அதிபர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறினார். ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பேனிஸ் கூறுகையில்,' நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறோம். எத்தனை காலம் ஆனாலும் பரவாயில்லை. அந்த நாட்டுக்கு உதவி செய்வதில் ஆஸ்திரேலியாவின் நலன் இருப்பதாகவே கருதுகிறோம்' என்று கூறினார்.பேச்சுவார்த்தையில் தொடக்கம் முதலே உக்ரைன் அதிபரிடம் சிடுசிடுவென பேசிய அதிபர் டிரம்ப், நீங்கள் ரஷ்யாவுடன் சமாதானமாக போக வேண்டும், இல்லையெனில் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார்.வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உக்ரைன் நாட்டுக்கான போர் செலவுகளை தொடர்ந்து செய்வதால், அமெரிக்க மக்கள் சலிப்பு அடைந்துள்ளனர். இந்த போரின் தற்போதைய நடைமுறை நிலவரங்களை ஏற்க உக்ரைன் அதிபர் மறுக்கிறார். ஆண்டு கணக்கில் போர் நடக்கிறது. அவரது நாட்டு மக்கள் தொடர்ந்து உயிரிழக்கின்றனர். போருக்கு செலவழிக்கும் அமெரிக்க மக்களோ சலிப்பு அடைந்து விட்டனர். போர் நிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை. முந்தைய அமெரிக்க அரசை காட்டிலும், இப்போதைய அமெரிக்க அரசுக்கு வேறு முன்னுரிமைகள் உள்ளன. அதிபர் டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டு வரவே விரும்புகிறார்.இவ்வாறு செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Gokul Krishnan
மார் 01, 2025 21:18

அமெரிக்காவுக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நல்ல எண்ணம் கிடையாது உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்க பயன்பாடு மற்றும் கட்டுப்பாட்டிற்கு ஜெலன்ஸ்கி ஒப்பு கொள்ளவில்லை கை எழுத்து போடவில்லை அந்த கோபம் கொண்டார் தான் இந்த அகங்காரம்


kulandai kannan
மார் 01, 2025 18:56

மோடியும் இதுபோல் சில சில்வண்டு எதிர்கட்சித் தலைவர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் தரவேண்டும்.


Barakat Ali
மார் 01, 2025 13:54

முதலில் போரைத் துவக்கிய ரஷ்யாவிடம் ஏன் ட்ரம்ப் வற்புறுத்தக் கூடாது ????


Srinivasan Krishnamoorthy
மார் 01, 2025 17:10

ukraine war started because of bats promise of admission of ukraine. war was triggered by nato and Biden team, that is why trump says, in his term there won't be a war


Barakat Ali
மார் 01, 2025 13:50

அமெரிக்கா எதிலும் தனது பிசினசைத்தான் பார்க்கும் .....


Senthoora
மார் 01, 2025 12:46

ஒரு ஊர்சுற்றும் ஊர் குருவி போரை நிறுத்துவேன் என்று, பன்ச் டயலாக் ஆ ?


N Sasikumar Yadhav
மார் 01, 2025 15:14

திருட்டு திராவிட மாடல் குருவி என தெளிவாக போடவும் தமிழக மாணவர்களை காப்பாற்றியதின்மீது ஸ்டிக்கர் ஒட்டியது நம்ம திருட்டு திராவிட மாடலையே சேரும்


Ram S
மார் 01, 2025 12:30

பெரிய இடத்து கட்ட பஞ்சாயத்து... அப்பிடி தான் இருக்கும்...


ஆரூர் ரங்
மார் 01, 2025 12:05

உக்ரேனை பிடித்தபின் ரஷ்யா சும்மா இருக்காது. அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகள் மீதுதான் பாயும். இந்த ஆபத்து அமெரிக்காவுக்கு இல்லையே. எனவே ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை நிர்மூலமாக்கினால்தான் அவை நிம்மதியாக இருக்கமுடியும். சீனாவுக்கு சமமான அரக்கன் அது.


Svs Yaadum oore
மார் 01, 2025 12:48

ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யாவை நிர்மூலமாக்க வேண்டுமா ??.....இது கனவில்தான் நடக்கும் ....ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை தூண்டி விட்டு போரில் உக்ரைன் மக்களை பலி கொடுத்தது ஐரோப்பிய நாடுகள் ....தூண்டி விட்டு பிறகு அதே ரஷ்யாவிடம் பெட்ரோல் எரி வாயு மட்டும் 600 மில்லியனுக்கு சென்ற ஆண்டு வாங்கியது பிரான்ஸ் .....இதைத்தான் டிரம்ப் கேள்வி கேட்பது ..


sridhar
மார் 01, 2025 12:00

You invited him and insulted him. Is this how a guest is treated ? Trump is arrogant and Ill mannered. I pity Trump’s team of advisors. Modiji manages differences better and more politely.


Srinivasan Krishnamoorthy
மார் 01, 2025 17:11

zelensky was to sign rare minerals deal in return of us money. Trump does not loose. Putin will not attack Ukraine without Trump s nod


Svs Yaadum oore
மார் 01, 2025 11:09

அமெரிக்காவின் செல்வாக்கு பற்றி அமெரிக்க அதிபர் தானே கவலைப்படனும் ....அது பற்றி வெள்ளைக்காரனிடன் பிச்சை வாங்கி தின்னும் மதம் மாற்றி விடியல் திராவிடனுங்களுக்கு என்ன கவலை .....


Svs Yaadum oore
மார் 01, 2025 11:06

டிரம்ப் உக்ரைன் அதிபரை வெளியேற சொன்னால் அதற்கு இங்குள்ள விடியல் திராவிடனுங்க கூட்டம் ஏன் அலறுது ??...டிரம்ப் ஆட்சிக்கு வந்ததே அரசு செலவினத்தை கட்டுப்படுத்தத்தான் ....இந்த உக்ரைன் யுத்தம் பகாசுர அமெரிக்க ராணுவ கம்பெனிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது ....அதற்கு டிரம்ப் இப்பொது மூடுவிழா ...வெள்ளைக்காரன் கொடுக்கும் பிச்சை காசில் வாழ்ந்து வந்த விடியல் திராவிட மதம் மாற்றிகள் கூட்டம் கொட்டமும் இனி அடக்கப்படும் ....


சமீபத்திய செய்தி