உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முக்கிய அதிகாரிகளுக்கே கூட தெரியாமல் சஸ்பென்ஸ்; டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் 3 பேர்

முக்கிய அதிகாரிகளுக்கே கூட தெரியாமல் சஸ்பென்ஸ்; டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் 3 பேர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்த அறிவிப்பு நடவடிக்கையை தமது அரசின் அதி உயர் முக்கிய அதிகாரிகளிடம் கூட ஆலோசிக்காமல் அதிபர் டிரம்ப் ரகசியமாக வைத்திருந்த விவரம் வெளியாகி இருக்கிறது.ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே கடந்த 12 நாட்களாக நீடித்த யுத்தம், அமெரிக்காவின் முயற்சியால் தற்போது போர் நிறுத்தமாக கைகூடி உள்ளது. சண்டை போட்டுக் கொண்ட இருநாடுகள் அறிவிப்பதற்கு முன்னதாகவே, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.முதலில் மறுத்த ஈரான் பின்னர் டிரம்ப் அறிவிப்பை வழிமொழிய, இஸ்ரேலோ ஒருபடி மேலே சென்று நன்றியையும் தெரிவித்துக் கொண்டது. 12 நாட்களாக நீடித்த இந்த யுத்தம், டிரம்பின் ஒரேயொரு போர் நிறுத்த அறிவிப்பு என்ற பதிவின் மூலம் எப்படி சாத்தியமானது? டிரம்பின் அறிவிப்புக்கு முன்னர் நடந்த அரசியல் கள நிலவரங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.மிக முக்கியமான, உலக நாடுகள் அனைத்தும் அத்தனை அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஈரான், இஸ்ரேல் சண்டையையும், அதன் போக்கிலான முன்னேற்றங்களையும் உற்று நோக்க ஆரம்பித்து இருந்தது. இப்படியான அரசியல் கால சூழலில் காற்றில் அசைந்தாடும் ஆலமர விழுதுகள் போல் போர்ச்சூழல் அங்கிங்கும் இங்கும் ஆடிக் கொண்டு இருந்தன. போர் நிறுத்த அறிவிப்புக்கு எடுத்த நடவடிக்கைகள் அவரது அரசின் அதி உயர் பொறுப்பு வகிக்கும் முக்கிய அதிகாரிகளிடம் கூட விவாதிக்காமல் டிரம்ப் சஸ்பென்ஸாக வைத்திருந்து இருக்கிறார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோப் ஆகியோர் உதவியால் போர் நிறுத்தம் செய்ய டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். இவர்கள் மூன்று பேரும், ஈரானிடம் நேரடி மற்றும் மறைமுக வழிகளில் போர் நிறுத்தம் செய்யும் வழிகளை கையாண்டு இருக்கின்றனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது; கத்தார் இதற்கு மத்தியஸ்தம் செய்ய உதவியது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்களுடன் பேசிய பின்னர், திடீரென போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுகிறார். போர் நிறுத்த விவாதங்களில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி பங்கெடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போர் நிறுத்த முடிவுக்கு மற்றொரு பக்க பலமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venkat
ஜூன் 24, 2025 19:39

ஐயா நோபல் பரிசு கமிட்டி அவர்களே சீக்கிரம் இந்த ட்ரம்ப்புக்கு ஒரு நோபல் பரிசு பார்சல் அனுப்பவும். இல்லை என்றால் இது போல் பல போர்களை அவர் நிறுத்த முயலுவார்.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 16:57

ஈரானியர்கள் பாரதத்தின் மீது படையெடுத்து வந்து செய்த அட்டூழியங்களை மறந்து விட்டு அந்த இழிவான ஆட்களை ஆதரிக்கும் மூர்க்க ஆட்களால் நாட்டுக்கு கேடு. தமிழகத்தில் கூட ஏராளமான புனிதச் சின்னங்கள் அவர்களால் அழிக்கப்பட்டன என்பது வரலாறு.


Murthy
ஜூன் 24, 2025 14:38

அமெரிக்காவின் பிம்பம் நொறுங்கி விட்டது ....மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க நிலைகளை தாக்கி அங்கு சேதாரம் ஏற்பட்டால் அமெரிக்காவின் ஆயுத விற்பனை குறைந்துவிடும்... ஏற்கனவே Iron dome, THAAD போன்ற ஏவுகணை தடுப்பு சாதனங்கள் செயலிழந்து போய்விட்டது.. கையறு நிலைக்கு இசுரேலும் வந்துவிட்டது ..இனி வேறு வழியே இல்லை ..... 23 ஆம் புலிகேசியானார் வல்லரசின் அதிபர் . ...


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 14:18

மனம் போன போக்கில் டிரம்பு எதையாவது சொல்கிறார் நடப்பது வேறாக உள்ளது. இப்போது மீண்டும் தாக்குதல் தொடர்கிறதாம்.


மூர்க்கன்
ஜூன் 24, 2025 16:40

என்ன அடிவயிறு கலங்குதா?? கொமேனி இப்போது யார் என்று தெரிகிறதா?? இவர் தீ என்று புரிகிறதா?? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தது நியாபகம் வருகிறதா??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை