உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துணை அதிபர் வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சி: டிரம்ப் அறிவித்தார்

துணை அதிபர் வேட்பாளராக ஜேம்ஸ் டேவிட் வென்சி: டிரம்ப் அறிவித்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியின் ஜேம்ஸ் டேவிட் வென்சியை அறிவித்தார் டெனால்டு டிரம்ப்.வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார்.நேற்று முன்தினம் (ஜூலை 13) பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். காது பகுதியில் காயம் ஏற்பட்டது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒஹியோ சென்றிருந்த டிரம்ப் அம்மாகாண செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சியை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
ஜூலை 16, 2024 05:10

எத்தனையோ தொழில் நுணுக்கங்களை வைத்து இடதுசாரிகள் டிரம்பை முடக்கப்பார்க்கிறார்கள். மனிதன் அதற்கெல்லாம் பணிந்து போகாமல் அதே வீராவேசத்தோடு போராடுகிறார். நிச்சயம் தன்னைத்தானே மன்னிக்க பொதுமக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நம்பலாம். வாழ்த்துகள்.


Tiruchanur
ஜூலை 16, 2024 03:23

JD வன்சி யின் மனைவி ஒரு பாரதீயர். பெயர் உஷா சிலுகூரி. இவர்களின் மகனின் பெயர் விவேக்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி