வாசகர்கள் கருத்துகள் ( 1 )
துணை அதிபரை சமரசம் பேச அனுப்பிவிட்டு, அவரை அதிபர் டிரம்ப் பலிக்கடாவாக ஆக்கப்பார்க்கிறார்.
வாஷிங்டன்: ஈரானுடனான அணுசக்தி பிரச்னைக்கு உண்மையான தீர்வு காண விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு முன்னதாகவே அமெரிக்கா கிளம்பிய டிரம்ப் விமானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரான் மீதான தாக்குதலை, இஸ்ரேல் எளிதில் கைவிடாது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.அந்நாட்டுடன் அணுசக்தி தொடர்பான பிரச்னைக்கு உண்மையான தீர்வு எட்டப்படுவதை விரும்புகிறேன். இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளுடன் ஆலோசிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப்பை தேவைப்பட்டால் அனுப்புவேன். என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
துணை அதிபரை சமரசம் பேச அனுப்பிவிட்டு, அவரை அதிபர் டிரம்ப் பலிக்கடாவாக ஆக்கப்பார்க்கிறார்.