வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இனம் இனத்தோட சேரும் அது நல்ல தான் இந்த முதல் அழைப்பு
நீங்க எந்த இனம் ட்ராவிடிய இனமா ?
தாத்தா வந்துட்டாரு.... கதற விட போராரு
ஜெருசலேம்; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தங்கள் நாட்டிற்கு வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், கடந்த இருவாரங்களுக்கு முன்பு முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பாக, தான் அதிபராக இருந்தால், உலகில் போர் நடக்க விட மாட்டேன் என்று கூறியிருந்தார். அவர் பலமுறை வெளியிட்ட எச்சரிக்கையாலும், பிற நாடுகள் முயற்சியாலும், காசாவில் நிகழ்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர், அவர் பதவியேற்புக்கு முன்னதாகவே முடிவுக்கு வந்தது.இந்நிலையில், பிப்., 4ம் தேதி தங்கள் நாட்டிற்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிபராக பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு தலைவருக்கு டிரம்ப் விடுத்த முதல் அழைப்பு இதுவாகும். காசாவில் இருக்கும் பாலஸ்தீனியர்களை எகிப்து மற்றும் ஜோர்டான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு எகிப்து, ஜோர்டான் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை டிரம்ப் சந்திக்க இருக்கிறார்.
இனம் இனத்தோட சேரும் அது நல்ல தான் இந்த முதல் அழைப்பு
நீங்க எந்த இனம் ட்ராவிடிய இனமா ?
தாத்தா வந்துட்டாரு.... கதற விட போராரு