உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் குறி தவறியது; நோபல் பரிசு கனவு தவிடுபொடி!

டிரம்ப் குறி தவறியது; நோபல் பரிசு கனவு தவிடுபொடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

]

நமது சிறப்பு நிருபர்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், இந்தாண்டுக்கான பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அதிபர் டிரம்பின் கடந்த கால பேச்சும், திரும்ப திரும்ப நான் போர்களை நிறுத்திவிட்டேன் என்றும் கூறியது தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vnglxfil&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமின்றி அவர் ஒரு படி மேலே போய், 'எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்' என்றும் தெரிவித்தது தான் அனைவரது கவனம் பெற்றது. இதனால் இந்தாண்டு நோபல் அமைதிப்பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.அதற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு இந்தாண்டு யாருக்கு என்பதை நார்வே நாட்டு பார்லிமென்ட் குழுவினர் அறிவித்தனர். அவர்கள் டிரம்பின் கனவுகளை தவிடுபொடியாக்கினர். இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை, வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ வென்றார்.

என்ன செய்வார் டிரம்ப்?

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் குறி தவறியது. என்ன தான் 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று கூறி வந்தாலும், டிரம்புக்கு நார்வே குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவில்லை. தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்று டிரம்ப் தாறுமாறாக விமர்சனங்களையும், அறிக்கையையும் அள்ளி வீசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Nathan
அக் 10, 2025 20:24

மூளை மழுங்கிய ஒருவர் குறி வைத்து செயல்பட இயலாது


NARAYANAN
அக் 10, 2025 18:48

மலாலா ஒபாமா இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதே ஒரு கேள்விக்குறியே,ஆச்சரியத்தை உள்ளடக்கிய நிகழ்வு.நல்ல வேலை தற்போதாவது கவனத்துடன் அரசியலாக்காமல் டிரம்பை தவிர்த்தது அறிவார்ந்த செயல்.


D.Ambujavalli
அக் 10, 2025 18:23

வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருந்தால் இன்று இப்படி ஊரும் உலகமும் சிருக்கும்படி Laughing stock ஆக மாறியிருக்க வேண்டாமே மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் குழந்தைபோல ஆர்ப்பாட்டம் செய்து முகத்தில் கரியைப் பூசிக்கொள்ளலாமா ?


sankaranarayanan
அக் 10, 2025 18:13

அமெரிக்காவுக்கு பெரும் அவமானம் என்றும் தெரிவித்தவர் அந்த அவமானம் இவரால்தான் கிடைத்தது என்றே சொல்லலாம்


Sun
அக் 10, 2025 18:12

கவலைப் படாதீர்கள். பாகிஸ்தானின் உயரிய விருது ஆறுதல் பரிசாக உங்களுக்கு வழங்கப்படும்.


Nathan
அக் 10, 2025 17:34

ஆயுத வியாபாரிகளுக்கு நோபல் பரிசு வழங்காததன் மூலம் நோபல் பரிசுக்கு உரிய கௌரவம் காப்பாற்ற பட்டு உள்ளது.


M. PALANIAPPAN, KERALA
அக் 10, 2025 17:31

நோபல் பரிசின் கௌரவம், மகிமை, சிறப்பு , மரியாதை காப்பாற்றபட்டுள்ளது நோபல் பரிசு தேர்வு குழுவிற்கு நன்றி


Saai Sundharamurthy AVK
அக் 10, 2025 17:14

மனுஷன் செம காண்டில் இருப்பார். எந்தெந்த நாட்டின் மீது தனது கோபத்தை காண்பிக்கப் போகிறாரோ ?????


Dhanalakshmi Balasubramanian
அக் 10, 2025 16:49

Test


Kumar Kumzi
அக் 10, 2025 16:44

மறு உருவம் இந்த டுபாக்கூர் டொனால்ட் டிரம்ப்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை