உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு வெடிகுண்டுகள்: டிரம்ப் உத்தரவு

இஸ்ரேலுக்கு வெடிகுண்டுகள்: டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின்படி, 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டு களை அனுப்புவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா உள்ளிட்ட பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்., 7ல் போர் துவங்கியது. சமீபத்தில் இருதரப்பும் போரை நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.இதில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கான, 2,000 பவுன்ட், அதாவது, 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தார்.தற்போது அவற்றை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு, சமீபத்தில் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 'ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களின்படி, இஸ்ரேல் ஏற்கனவே பணத்தை கொடுத்துள்ளதால், வெடிகுண்டுகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்' என, சமூக வலைதளத் பதிவில் டிரம்ப் கூறிஉள்ளார்.இதற்கிடையே, போரால் சிதிலமடைந்துள்ள காசா பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அங்குள்ள மக்கள் அகதிகளாக வரும்போது ஏற்கும்படி, பாலஸ்தீனத்தின் அண்டை நாடுகளான ஜோர்டான், எகிப்து ஆகியவற்றை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Laddoo
ஜன 27, 2025 08:55

டிரம்ப் சொன்னதை சரியாக படித்தீர்களா?


தியாகு
ஜன 27, 2025 07:58

மூர்க்கர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள உலகத்தின் எந்த ஒரு நாடும் பயம் கொள்ளும், ஏன்னா மூர்க்கர்களின் டிசைன் அப்படி.


Kasimani Baskaran
ஜன 27, 2025 07:41

தீவிரவாதிகளை முழுவதுமாக முடித்து வைத்திருக்க வேண்டும். இடையில் விட்டது இஸ்ரேலுக்கு பின்னடைவுதான்.


Bahurudeen Ali Ahamed
ஜன 27, 2025 10:50

சொந்த நிலத்துக்காக தன் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடுபவன் உங்களுக்கு தீவிரவாதி, மற்றவரின் நிலத்தை அபகரிக்க பெண்கள் குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலியர்கள் உங்களுக்கு நல்லவன், ஆயுத பலம் அமெரிக்காவின் துணை இருக்கிறது என்பதற்காக ஆடுகிறார்கள், கடவுளைவிட யாரும் பெரியவர்கள் இல்லை, பார்ப்போம் காலம் பதில் சொல்லும்


தமிழ்வேள்
ஜன 27, 2025 11:41

திரு. பஹ்ருதீன், தாங்கள் நல்லவராக விதிவிலக்காக இருக்கலாம் .. ஆனால் தாங்கள் சார்ந்துள்ள மூர்க்கத்தின் உப்புத்துரோக வரலாறு, அவர்களை நம்புவதனை தடுக்கிறது...தனக்கு ஆதரவளித்து சோறுபோட்ட நாட்டிலேயே கொலை கொள்ளை கற்பழிப்பு, கோவில் இடிப்பு, வலுக்கட்டாய மதத்திணிப்பு, போன்றவற்றை மேற்கொள்ளும் ஒரு துரோக வரலாறுடைய இனத்தை யாரும் நம்பமாட்டார்கள் ..மாறாக அந்த இனம் வதைபட்டால் சந்தோஷப்படுவார்கள். காரணம், உங்கள் மதத்தினர் செய்த மனித தன்மையற்ற வெறியாட்டங்கள். பாலைவனம் ஈரமற்றது என்பதால், உங்கள் மார்க்கத்தின் மதங்கள், மத கருத்துக்கள் கூட ஈரமற்று வன்முறை நிரம்பியதாக இருக்க வேண்டுமா என்ன? உங்கள் முன்னோர் செய்த கொடும்பாவம், தற்போதைய சந்ததிகளை திருப்பியடிக்கிறது. இதைத்தான் ஹிந்துதர்மம் கர்மா என்கிறது. திருவள்ளுவர் சொன்ன "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பதும் இதுதானே ?


Ganapathy
ஜன 27, 2025 18:17

பக்ருதீன் அலி, ரொம்பபொங்க வேண்டாம். இந்தியாவில் தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டாத பல விஷயங்களில் ஒன்று ஹமாஸ் மீது பாலஸ்தீனர்கள் காறித்துப்புவது. ஹமாஸால் தாங்கள் சீரழித்து ஹமாஸின் கொடுங்கோல் கொள்ளை நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலமும் பெயரும் கெட்டுப் போயுள்ளதை கண்டு பாலஸ்தீனர்கள் கொதித்து போயுள்ளனர். இது எதுவுமே இந்தியாவில் உள்ளவர்களுக்கு தொலைக்காட்சிகள் காட்டுவதில்லை. எனவே அளவாக அவசியமாக மட்டுமே பொங்கவும்.


Bye Pass
ஜன 27, 2025 07:21

அரபு நாடுகளில் குடியேற அனுமதிக்கலாம் ..ஓசி பணத்தில் அதாவது மற்ற நாடுகள் வழங்கும் நிவாரண தொகையில் வாழ்க்கை நடத்தி சுகம் காணும் கும்பல் உழைப்பதில்லை


Senthoora
ஜன 27, 2025 06:56

எல்லாம் நல்லது, ஆனால் இவர் அகதிகளை திருப்பி அனுப்புவாராம், மற்றவர்கள் அகதிகளை ஏற்றுக்கொள்ளணுமாம். இடிக்குதே.


Bye Pass
ஜன 29, 2025 06:16

இடுச்சு இடுச்சு தானே இவ்வளவு தீவிரவாதிகள் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை