உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  பரஸ்பரம் விமர்சித்து வந்த நியூயார்க் மேயர் மம்தானியை புகழ்ந்து தள்ளினார் டிரம்ப்

 பரஸ்பரம் விமர்சித்து வந்த நியூயார்க் மேயர் மம்தானியை புகழ்ந்து தள்ளினார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி இருவரின் முதல் சந்திப்பில், கருத்து வேற்றுமையை மறந்து புன்னகை, பாராட்டு, வாக்குறுதியை பகிர்ந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். இருவரும் தங்கள் அரசியல் வேறுபாடுகள் காரணமாக பல மாதங்களாக ஒருவரையொருவர் தாக்கி விமர்சித்து வந்தனர். ஒருமுறை மம்தானி பற்றி குறிப்பிடும்போது 'கம்யூனிஸ்ட் பைத்தியம்' என்று டிரம்ப் விமர்சித்திருந்தார். இதேபோல், டிரம்பை 'சர்வாதிகாரி, பாசிசவாதி' என மம்தானி கடுமையாக தாக்கியிருந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்பும், மம்தானியும் கருத்து மோதல்களை மறந்து நேற்று சந்தித்து பேசிக் கொண்டனர். இணக்கமான இச்சந்திப்பில், மம்தானியை, மிகவும் நன்றாக தன் பணிகளை செய்வார் என தாம் நம்புவதாக தெரிவித்த டிரம்ப், அவ்வாறு சிறப்பாக செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கட்சி வேறு பாடுகளை தவிர்த்து, பாதுகாப்பான நியூயார் க்கை உருவாக்க தங்கள் நிர்வாகம் மம்தானிக்கு உதவும் என வாக்குறுதியளித்தார். டிர ம்பின் சொந்த ஊரான நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற வகையில், நகரம் சார்ந்த பிரச்னைகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி மற்றும் ஒத்துழைப்பு தேவை என்பதை விளக்கும் வகையில் நடந்த இச்சந்திப்பு, மம்தானியின் அணுகுமுறையை உறுதிபடுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை