உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வர்த்தகப் போரை தொடங்கிய டிரம்ப்; உலக வர்த்தக அமைப்பை நாடும் சீனா

வர்த்தகப் போரை தொடங்கிய டிரம்ப்; உலக வர்த்தக அமைப்பை நாடும் சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ஜிங்: தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா விதித்த வரியை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் முறையிட இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், சில மருந்து பொருட்களுக்கு 25% வரியையும், சீனா பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியையும் விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=louqeogc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நமது குடிமக்களைக் கொல்லும் கொடிய மருந்துகளின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இந்த உத்தரவு சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கையை தொடர்ந்து கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளன.இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயலுக்கு சீனாவின் வர்த்தகத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கூறியதாவது: வர்த்தகம் மற்றும் கட்டணப் போரில் இதுவரையில் யாரும் வென்றதில்லை. அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான வரி விதிப்பு நடவடிக்கை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறிய செயலாகும். டிரம்ப்பின் இந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு முயற்சிகளில் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்படும். இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவோம், என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

veeramani
பிப் 03, 2025 10:13

அனைத்து நாடுகளும் உணவு தானியம் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும். மற்றைய பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிப்பின் கவலையில்லை


Chakkaravarthi Sk
பிப் 03, 2025 07:03

நேரு குடும்பத்தை பரம்பரை ஆட்சி தொடர வேண்டும். இதற்கு பின் தேர்தலே நடத்தக் கூடாது. தேர்தல்களின் கலைத்து விட வேண்டும்.


Senthoora
பிப் 03, 2025 05:51

என்னதான் அமெரிக்க அதிபர் பெரியண்ணன் என்ற நினைப்பில் இருந்தாலும். அயல் நாடுகளுடன் நட்புறவில் இருக்கணும், இதுக்கு இந்தியாவை பார்த்து, இந்தியா எப்படி இலங்கை, பாக்கிஸ்தான், பெண்களதேஷ், சீனா நாடுகளுடன் சமரச உடன் பாடுகளுடன் கையாளுகிறது என்பதை அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளனும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 02, 2025 21:25

இந்தியா உடனே அடிபணிந்து விட்டது. Harley Davidson பைக் மீதான இறக்குமதி வரியை பாதியாகக் குறைத்து விட்டது. மோடி அமெரிக்கா செல்லும் முன்பு இது உடனடியாக அமலுக்கு வர வைத்து விட்டுத் தான் அமெரிக்கா கிளம்பறார்.


Chakkaravarthi Sk
பிப் 03, 2025 07:06

இனிமேல் ராகுல் தான் பிரதமர்


guna
பிப் 03, 2025 11:00

உன் கஷ்டம் புரியுது...டாஸ்மாக் பாடிலுகு 10 ரூவா குறைசா நீயும் சந்தோசபடுவ....


Karthik
பிப் 02, 2025 21:21

"டிரம்ப்பின் இந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு முயற்சிகளில் நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்படும். இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவோம்" - செய்தி. அது என்ன போதைப்பொருள் கட்டுப்பாடு? ஒன்னும் புரியலயே??


புதிய வீடியோ