உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அக். 30ல் தென் கொரியா உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்

அக். 30ல் தென் கொரியா உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்

சீயோல்: தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் டிரம்ப் அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அக்.30ல் சந்தித்து பேச உள்ளார். மேலும், மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 24, 2025 09:41

சீன அதிபர் ஜி ஜின்பிங் எனது சிறைந்த நண்பர் என்று டிரம்ப் கூறுவார். பிறகு நாடு திரும்பியபின், அல்லது வழியிலேயே விமானத்தில் இருந்துகொண்டே சீனாவின் மீது அதிக வரி விதித்து அறிக்கைவிடுவார். அப்படித்தானே இந்தியா பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்று கூறிவிட்டு, பிறகு இந்தியா மீது அதிக வரிகளை விதித்தார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை