உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாஸ் அமைப்பினரின் முடிவு மோசமாக இருக்கும்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினரின் முடிவு மோசமாக இருக்கும்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' ஹமாஸ் அமைப்பினர் சரியான நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் அவர்களின் முடிவு மோசமாகவும், கொடூரமாகவும் இருக்கும்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, கடந்த இரு ஆண்டுகளாக சண்டை நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சித்தன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, 20 அம்ச திட்டத்தை வலியுறுத்தியதை அடுத்து, சில நாட்களுக்கு முன் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது.போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் அமைப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளூர் அமைப்பினர் செயல்பட்டதாக கூறி, எட்டு பேருக்கு ஹமாஸ் தரப்பில் துாக்கு தண்டனை சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.அங்கிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதையடுதது, 'காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை' என, டிரம்ப் எச்சரித்து இருந்தார்.இந்நிலையில் டிரம்ப் இன்று( அக்.,21) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஹமாஸ் அமைப்பினர் அமைதியை மீறினால் அல்லது மோசமாக நடந்து கொண்டால், காசாவுக்கு சென்று அந்த அமைப்பினரை , எனது வேண்டுகோளின் பேரில் மிகப்பெரிய படைகளுடன் நேருக்கு நேர் சந்திக்க தயாராக உள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள எண்ணற்ற நட்பு நாடுகள் என்னிடம் வெளிப்படையாகவும், உறுதியாகவும் தெரிவித்தனர்.கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் இவ்வளவு அன்பு மற்றும் உற்சாகத்தை பார்த்தது இல்லை. பார்ப்பதற்கு இது ஒரு அழகான விஷயம். ஆனால் இன்னும் இல்லையென்று அந்த நாடுகளிடமும் இஸ்ரேலிடமும் கூறியுள்ளேன்.ஹமாஸ் அமைப்பினர் சரியானதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. அப்படி செய்யாவிட்டால் அவர்களின் முடிவு வேகமாகவும், தீவிரமாகவும் கொடூரமாகவும் இருக்கும். உதவி செய்ய தயார் என அழைத்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்குக்கும் செய்த உதவிக்காக இந்தோனேஷியா மற்றும் அந்த நாட்டின் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 21, 2025 21:46

தீவிரவாதிகள் தீவிரவாதத்தை கைவிட்டதாக சரித்திரம் இல்லை. டிரம்ப்பின் வேலை மிகவும் கஷ்டம் தான். சமாதான உடன்படிக்கை சம்பந்தப்பட்ட அனைவராலும் கையைப்பமிட்டபின்பும், இவ்வாறு கொலைகள் நடைபெறுகிறன்றால், ட்ரும்பின் நிலைமை பரிதாபத்திற்குரியது தான். இனிமேல் எந்த நாடும் அவரை நம்பி சமாதான உடன்படிக்கையை ஏற்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை