உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து 2 வாரங்களில் அதிபர் டிரம்ப் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் என்ற கணிசமான வாய்ப்பு உள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து 2 வாரங்களில் அதிபர் டிரம்ப் முடிவு செய்வார்.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். வலிமையின் மூலம் அமைதியை உருவாக்கும் அதிபர். எனவே ராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால் அதிபர் எப்போதும் அதை பயன்படுத்தி கொள்வார். ஆனால் அவர் பலத்தை பயன்படுத்த பயப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையை குறி வைத்து, ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். அவர், 'டெஹ்ரானின் உள்ளவர்கள் கடும் விளைவுகளை சந்திப்பார்கள்'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SP
ஜூன் 20, 2025 16:32

பாகிஸ்தானை ஆதரிக்கும் அமெரிக்க அதிபருக்கு, ஈரானை கண்டிப்பதற்கு எந்த அருகதையும் கிடையாது.


தஞ்சை மன்னர்
ஜூன் 20, 2025 16:04

அடுத்தவன் என்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ அதை நீ முதலில் செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும்


தஞ்சை மன்னர்
ஜூன் 20, 2025 16:03

இவ்வாறு எதற்கு சண்டையிட முயற்சிக்கவேண்டும் அமெரிக்கா இருப்பது அமெரிக்கா கண்டத்தில் இஸ்ரேல் இருப்பது ஆசியாவில் அவர்களுக்கு ஆசியாவில் இருக்க பிடிக்கவில்லை என்றால் அமெரிக்கா அருகில் இருக்கும் ஏதாவது தீவை விலைக்க்கி வாங்கிக்கொண்டு அணைத்து இஸ்ரேலியனும் போய் விடலாமே ஏன் இந்த அக்கபோரு


uss_ mag
ஜூன் 20, 2025 15:32

ஈரான் மக்களுக்கு அமெரிக்கா விடுதலை வாங்கி தரவேண்டும்...ஈரான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும், மத சார்பற்ற நாடக மலர வேண்டும்


Anand
ஜூன் 20, 2025 12:53

இவனை இன்னுமா அமெரிக்கா, இஸ்ரேல் நம்புது?


Anand
ஜூன் 20, 2025 12:39

அதற்குள் இரு தரப்பிலும் மாறி மாறி தாக்கி ஒரு வழியாகி விடுவார்கள், பிறகு இவன் உள்ளே நுழைந்து செத்த பாம்பை அடித்து வீரத்தை நிலை நாட்டுவான்.....


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:21

ஈரானிடம் ஏதாவது எதிர்பார்க்கிறார் போலத்தெரிகிறது இந்த டிரம்ப். அல்லது அமெரிக்க ராணுவ தயாரிப்புக்களை அவர்களுக்கு விற்க யோசிக்கிறாரோ...?


Gentleman
ஜூன் 20, 2025 11:14

இரண்டு வாரம் எதற்கு பாகிஸ்தான் போரை நிறுத்துவத்திற்கு 24 மணி நேரம் தான் எடுத்தார்


N Srinivasan
ஜூன் 20, 2025 10:48

இவனுடைய மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது நேற்று எல்லா மக்களும் teheran விட்டு வெளியே ஓடுங்கள் என்றான் இன்று இந்த செய்தி.....அமெரிக்கா அதிபர் என்ற மதிப்பு போய்விட்டது உலகத்தில் இதில் இவனுக்கு நோபல் பரிசு வாங்கவேண்டும் என்று ஆசை


கல்யாணராமன்
ஜூன் 20, 2025 10:31

நீங்கள் முடிவெடிப்பதற்குள் இஸ்ரேல் முடிந்துவிடும். பிறகு நீங்கள் செத்த பாம்பை அடித்துவிட்டு உங்களை வீரனாக உலகில் பறைசாற்றுவீர்.


சமீபத்திய செய்தி