உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் முடிவால் இந்திய பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும்: சிதம்பரம்

டிரம்ப் முடிவால் இந்திய பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும்: சிதம்பரம்

புதுடில்லி: 'இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அதிக வரி விதிப்பது என்று டிரம்ப் முடிவு எடுத்தால் அது நம் நாட்டுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்' என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரியை விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் ஏப்., 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடியாக வரி விதிக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்த சூழலில், அமெரிக்க பைக்குகள், விஸ்கிகள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில், பார்லிமென்ட்டில் விவாதமோ அல்லது எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று ராஜ்யசபாவில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; அமெரிக்கர்கள் நிலையான முடிவை எடுக்காதவர்கள். ஆனால், உங்களுக்கு மாற்று சூழ்நிலைகள் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு அடி முன்னேறினால் நமது பதில் என்னவாக இருக்கும். அவர்கள் 2 அடி பின்னோக்கி வைத்தால், நமது பதில் என்னவாக இருக்கும். உங்களின் பதிலை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், குறைந்தபட்சம் பார்லிமென்ட்டில் ஒரு அறிக்கையாவது வெளியிடலாம். அல்லது எதிர்க்கட்சிகளுடன் ஒரு ஆலோசனையாவது நடத்தியிருக்கலாம். இந்த விவகாரத்தில் நாங்கள் இருளடைந்து இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அமெரிக்காவின் இந்த நிலையற்ற கொள்கைக்கு எதிரான எதிர் கொள்கையை யார் வகுக்கப் போகிறார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. விவசாயம், ஜவுளி, தொழிற்சாலை பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உலக சந்தையிலும் நாம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறோம். இப்படிபட்ட சூழலில், அதிபர் டிரம்ப், ஒரு நாட்டை மட்டும் தேர்வு செய்து, அதிக வரிகளை விதித்தால், அந்த நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு விடும். ஒருவேளை, மற்ற நாடுகளை விட்டு விட்டு, இந்தியாவை அதிபர் தேர்வு செய்தால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்படும். இதனால், 3 அல்லது 6 மாதங்களில் நமது பொருளாதாரம் முற்றிலும் அழிந்து போய் விடும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Bhakt
மார் 29, 2025 22:38

உங்க வேலைய பாருங்க . அந்த வேலைய மோடி அண்ட் டீம் பார்த்து கொள்ளும்.


C S K
மார் 28, 2025 22:11

ஆடு நனைகிறதே???....ஸ


Ambedkumar
மார் 28, 2025 20:16

அமெரிக்கா இறக்குமதி வரியை ஏற்றுவதனால் அந்நாட்டு மக்களுக்குதான் பாதிப்பு. மேலும், வரி உயர்வு பெருவாரியான நாடுகளுக்கும் பொருந்தும் என்பதால், மற்ற நாடுகளுக்கான இழப்பு நமக்கு சாதகமாகவும் அமையலாம். மேலும், அமெரிக்கா அனுப்பியுள்ள குழு இந்தியாவுடன் வரி விதிப்பு சம்பந்தமாகப் பேச்சு நடத்தி வருவதால் திகார் கொண்டான் சொல்லுவது போல் ஒன்றும் நடக்காது.


Rajan A
மார் 28, 2025 20:06

இவர் எப்போதும் இப்படி இந்தியாவிற்கு எதிராக தான் பேசுவார்


நரேந்திர பாரதி
மார் 28, 2025 18:25

டிரம்ப் முடிவால் இந்திய பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும்: சிதம்பரம்...என்ன ஒரு சந்தோசம்!உங்களோட சொத்தை வித்தாலே இந்தியாவுக்கு பத்து வருசத்துக்கு பட்ஜெட் போடலாமே


A1Suresh
மார் 28, 2025 17:42

என்னாது சிவாஜி செத்துட்டாரா ? 2000 ஆண்டில் வந்த ரெசிஷனை இப்பொழுது பேசுகிறார் போல


Ram Moorthy
மார் 28, 2025 15:36

ஓசி கிராக்கி பதவியில் இருந்த வரை மக்களுக்கு என்ன நல்லது செய்தாய்


Velayutham rajeswaran
மார் 28, 2025 14:23

பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு நல்லது என்பது அறியவும்


Nanda Kumar
மார் 28, 2025 13:18

as if the Congress can do wonders He has exposed his mind. And this what what exactly the opposition wanted


Srinivasan M
மார் 28, 2025 12:54

பி சி நீங்க உங்க மாடியில் காலிபிளவர் சாகுபடி செய்து உதவலாமே


முக்கிய வீடியோ