உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கிச் சூடு இரண்டு குழந்தைகள் பலி

அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கிச் சூடு இரண்டு குழந்தைகள் பலி

மினியபோலிஸ், :அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணம் மினியபோலிஸ் நகரில் உள்ள பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் கொல்லபட்டனர். மினியபோலிஸ் நகரில் கத்தோலிக்க சர்ச் உடன் கூடிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன் அங்கு உள்ள சர்ச்சில் குழந்தைகள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது சர்ச்சின் பக்கவாட்டு பகுதியாக வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக குழந்தைகள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த கொடூர தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். 14 பேர் குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இறந்த நிலையில் கிடந்தார். விசாரணையில் அவர் 20 வயது இளைஞர் என்பதும், குற்ற வழக்குகள் ஏதும் அவர் மீது இல்லை என்பதும் தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 28, 2025 03:18

இந்த துப்பாக்கி சூட்டை நிறுத்த வக்கில்லாதவர் ஏழு நாட்டு போரை நிறுத்தினாராம். அதை நம்பாட்டி அதிக வரி போடுவாராம். லூசுப்பய .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை