உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரே ராக்கெட்டில் 2 லேண்டர்கள்; நிலவில் ஆய்வு செய்ய பறந்தன

ஒரே ராக்கெட்டில் 2 லேண்டர்கள்; நிலவில் ஆய்வு செய்ய பறந்தன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கேப் கேனவரல் : நிலவில் ஆய்வு செய்வதற்காக, அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின், 'லேண்டர்' சாதனங்களுடன், 'ஸ்பேஸ்எக்ஸ்' தனியார் நிறுவனத்தின் ராக்கெட் புறப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ளது. விண்வெளிக்கு சுற்றுலாவையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நிலவை நோக்கி நேற்று புறப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த, 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 'ஐஸ்பேஸ்' நிறுவனம் ஆகியவற்றின், லேண்டர் எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனங்களுடன் புறப்பட்டுள்ளது. இந்த லேண்டர் சாதனங்களில், 'ரோவர்' எனப்படும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.நிலவில் ஆய்வு செய்து, அதில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு மீண்டும் திரும்புவது இந்த பயணத்தின் நோக்கம். அமெரிக்க நிறுவனத்தின் லேண்டர், மே மாத துவக்கத்திலும், ஜப்பான் நிறுவனத்தின் லேண்டர் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் நிலவில் தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை, அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுகள் செய்துள்ளன. அமெரிக்கா மட்டுமே மனிதர்களை நிலவுக்கு அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 10:01

திராவிட மாடல் அரசாங்கத்தின் கீழ் ISRO அல்லது விண்வெளித் துறை இல்லை என்று தெரியாதா??


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 09:52

நிலாவில் 14 நாட்கள் இருளாக இருக்கும். வெளிச்சமே இருக்காது.. அடுத்த 14 நாட்கள் தொடர்ந்து வெயிலாகவே இருக்கும். இருட்டே வராது. தண்ணீர், ஆக்சிஜன் இல்லை. புவி ஈர்ப்பு விசையும் குறைவு. இன்னும் என்ன ஆராய்ச்சி புண்ணாக்கு அங்கே செய்யப் போகிறார்கள்? எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும். நன்றி


Rajinikanth
ஜன 16, 2025 11:09

இது முக்கியமாக வர்த்தகத்திற்காக. ஒரு நிலவு முழுக்க என்ன என்ன மினெரல்ஸ் எல்லாம் கிடைக்கும். அதை யார் முதலில் கண்டுபிடித்து அதை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்ப்பதற்காகவே. அது மட்டுமில்லாமல் வருங்காலத்தில், வேறு கிரங்கங்களுக்கு சென்று வர தேவையான தொழில்நுட்பத்தை அருகில் இருக்கும் நிலவை வைத்து சோதித்துக்கொள்ளலாம்.


Venkatesan Ramasamay
ஜன 16, 2025 11:13

ஓ அப்படியா ... அது ஒண்ணுமில்லீங்க .ஏதாவது வேலை செய்யுறமாதிரி நடிக்கணும். இல்லைனா இந்த விண்வெளி டெபார்ட்மெண்ட்டையே தூக்கிடுவாங்கனு ஒரு பயம்தான்.


Kasimani Baskaran
ஜன 16, 2025 07:41

ஆத்தா தீம்கா ஐடி விங்கை கலைத்து அதன் தலைவரை தூக்கி இருப்பதன் மூலம் தீம்க்காவின் தொழில்நுட்பப்பிரிவு விரைவில் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்ப இருக்கிறது. உடன்பிறப்புக்கள் குதூகலம்.


raja
ஜன 16, 2025 07:02

திராவிடம் டா .. போதை டா... திருட்டு மாடல் டா....தமிழகம் டா... நம்பர் ஒன்னு டா... காறி துப்பு டா...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 16, 2025 09:58

எதுக்கு இந்த வன்மம்?? யார் மீது? ஏன் இப்படி வெறி கொண்டு அநாகரிகமா ....


தமிழ்வேள்
ஜன 17, 2025 08:20

எழுபதாண்டு கழிசடைகளின் ஆட்சியில் தமிழனை தேசபக்தி தெய்வபக்தி அற்ற மூளை மழுங்கிய குடிகாரன் சினிமா அடிமை ஆக்கி, பாரதத்தின் முன்னணியில் இருந்தவனை கடையனினும் கீழாகத்தள்ளி தானும் தன் குடும்பமும் மட்டுமே சுக வாழ்வு வாழ ஒரு இனத்தையே ஒட்டு மொத்தமாக காவு கொடுத்து இன்னும் நூறாண்டுகளுக்கு எழுந்திருக்க முடியாமல் செய்த திராவிடத்தின் மீதான அறச்சீற்றம்.....


Barakat Ali
ஜன 16, 2025 06:18

2 நாளில் ரூ.453 கோடி அள்ளியது டாஸ்மாக் ............ இந்த ந்யூச்சு இருக்குதே பக்கத்துலயே ????? அப்போ நாம நிச்சயம் வல்லரசுதான் .... ஏற்கனவே .......