உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் புடின் வீடு மீது ட்ரோன்கள் தாக்குதல்; ரஷ்யாவின் குற்றச்சாட்டு பொய் என்கிறது உக்ரைன்

அதிபர் புடின் வீடு மீது ட்ரோன்கள் தாக்குதல்; ரஷ்யாவின் குற்றச்சாட்டு பொய் என்கிறது உக்ரைன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை. ரஷ்யா பொய் சொல்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். அவர், ''91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பாதிக்கும்' என்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=az4jcrrl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புடினின் வீட்டை குறி வைத்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரஷ்யா மீண்டும் தனது வேலையைத் தொடங்கியுள்ளது. அதிபர் டிரம்பின் குழுவுடனான நமது கூட்டு ராஜதந்திர முயற்சிகளின் அனைத்து சாதனைகளையும் சீர்குலைக்க, அது ஆபத்தான குற்றச்சாட்டை சுமத்துக்கிறது. அமைதியை உருவாக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம். புடினின் வீடு மீதான தாக்குதல் ஒரு புனைகதை. அவர்கள் பொய் சொல்கின்றனர். எங்கள் மீது அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்தவும், அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா மறுப்பதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்கள். மேலும், ரஷ்யர்கள் கடந்த காலங்களில் எங்களது அமைச்சரவை கட்டடத்தை ஏற்கனவே குறிவைத்துள்ளனர்.உக்ரைன், ராஜதந்திரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மாறாக, ரஷ்யா எப்போதும் அத்தகைய நடவடிக்கைகளையே எடுக்கிறது. இது எங்களுக்கிடையேயான பல வேறுபாடுகளில் ஒன்றாகும். இந்த நேரத்தில் உலக நாடுகள் மவுனமாக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம். நிலையான அமைதியை உருவாக்க மேற்கொள்ளப்படும் பணிகளை ரஷ்யா சீர்குலைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இது நல்லதல்ல!

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: தனது வீட்டை உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த குறிவைத்தது என்று ரஷ்ய அதிபர் புடின் என்னிடம் கூறினார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V.Mohan
டிச 30, 2025 19:45

இந்த இளைஞர் ஜெலன்சிக்கு பித்துப் பிடித்து விட்டது. ஐயா, தனது நாட்டு இளைஞர்கள் இத்தனை பேரை சாகவிட்டு எதை காப்பாற்ற நினைக்கிறீர்?? "" நேட்டோ"" ஒப்பந்த நாடுகளுடன் சேராதே என்கிறது ரஷ்யா இல்லை சேருவேன் என்கிறது உக்ரைன் இதுதானய்யா பிரச்னை மொத்த பிராப்ளமே நாட்டு மக்களை சாக விட்டு வேடிக்கை பார்ப்பது என்ன ராஜதந்திரமோ அமெரிக்க நரி எந்த ஆடு சாகப்போகிறது என எதிர்பார்க்கும் நரி போன்றது


Anand
டிச 30, 2025 13:10

பதில் தாக்குதல் என ஜெலன்ஸ்கியை போட்டு தள்ளுவார்கள், அதோடு சண்டை முடிவுக்கு வரும்.


soundher
டிச 30, 2025 08:50

இவர்கள் சண்டை ஓய்வு ஓயாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை