உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது: சொல்கிறார் டிரம்ப்!

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது: சொல்கிறார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: 'உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளும்' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hwfup2g0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இப்போது நாம் ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டும். ரஷ்யாவும் அதற்கு ஒப்புக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கொடூரமான போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் வீரர்களும் கொல்லப்படுகிறார்கள். 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. போர் நிறுத்தம் கொண்டு வருவது மிகவும் முக்கியம். ரஷ்யாவை இதைச் செய்ய சொன்னால், அது மிகச் சிறப்பாக இருக்கும். எனவே, இது மிகப் பெரியது என்று நான் நினைக்கிறேன்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
மார் 12, 2025 10:39

டிரம்பிற்கு இந்த ஆண்டு உலக அமைதிக்குண்டான ஆஸ்கார் பரிசை வழங்கலாம்


Srinivasan Krishnamoorthy
மார் 12, 2025 18:06

trump deserves nobel peace prize for stopping wars Ukraine,Israel/Gaza etc.no other deserves like him.


Oru Indiyan
மார் 12, 2025 09:16

டிரம்ப் ஒரு காங்கிரஸ் காரர் போல, திருடர் கட்சி தலைவர் போல பொய் பேசுகிறார்.


Karthik Masagounder
மார் 12, 2025 15:40

ஒரு நாயம் தருமம் வேணாமா ..யார யாரோடு ஒப்பிடுவதுனு


SANKAR
மார் 12, 2025 08:56

At first stage it is ceasefire for 30 days during which negotiation for complete stoppage of war will take place.This is confirmed by Ukrain.


अप्पावी
மார் 12, 2025 08:35

ட்ரம்புக்கு எப்பவும் காமெடிதான். போன வாரம், மோடி எல்லா டாரிஃப்க்கும் ஒத்துக்கிட்டாருன்னு சொன்னாரு. நேத்திக்கி பர்திவால் அதெல்லாம் சும்மா தமாஷ் நு விளக்கம் அளித்தார். எல்லோரும் வெளையாட்டு புள்ளைங்களா இருக்காங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 12, 2025 08:55

பல்ட்டியடிச்ச மாதிரி ன்னு சொல்லு தல ....


Laddoo
மார் 12, 2025 08:58

கட்டுக் குடும்பம் மற்றும் வாரிசுகளைப்போல டிரம்ப் ஒன்றும் வழ வழா கொழ கொழா கிடையாது. அவர் ஓர் பிசினஸ்மேன். அடி ஒண்ணுதான் வெட்டு ரெண்டுதான்.


SANKAR
மார் 12, 2025 13:13

go and read latest news . Zelensky confirmed


Srinivasan Krishnamoorthy
மார் 12, 2025 18:07

go to Pakistan if you want news of your choice. wake up new reality.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை