உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  காசா குறித்து ஐ.நா.,வில் இன்று விவாதம்: இஸ்ரேலுடன் ரஷ்யா ஆலோசனை

 காசா குறித்து ஐ.நா.,வில் இன்று விவாதம்: இஸ்ரேலுடன் ரஷ்யா ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: காசா போர் நிறுத்தம், ஈரான் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியா குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசியில் விரிவாக விவாதித்தனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத குழுவுக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் நடந்த போர், அமெரிக்காவின் அமைதி ஒப்பந்த திட்டத்தின் கீழ், தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு அமைதிப் பணிகளை மேற்கொள்ளவும், காசா பாதுகாப்பிற்கும் உலக நாடுகள் பங்கேற்கும் அமைதிப்படையை நிறுவுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கண்காணிப்பில் சர்வதேச நிர்வாக குழு ஒன்று காசாவை நிர்வகிக்க அமைக்கப்படும் என, அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஒப்புதல் பெறுவதற்கான வரைவு தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. இதற்கு போட்டியாக, ரஷ்யா மற்றொரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. இந்தத் தீர்மானங்கள், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இந்நி லையில், நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசி யில் தொடர்புகொண்டு பேசினார். காசா போர் நிறுத்தம் மற்றும் பிணை கைதிகள் விடுவிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், ஈரான் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, இருவரும் பேசியதாக கூறப் படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில், இரு தலைவர்களிடையே நடந்த இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ