உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை; திவால் நிலையை நோக்கி செல்லும் மாலத்தீவுகள்

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை; திவால் நிலையை நோக்கி செல்லும் மாலத்தீவுகள்

மாலே: வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், அதிபர் முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசு திவால் அடையும் சூழலை எதிர்நோக்கியுள்ளது.அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது. அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இன்னும் ஒரு மாத அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே கையிருப்பில் அந்நிய செலாவணி அந்நாட்டு அரசின் கருவூலத்தில் உள்ளது.வேறு வழியில்லாத சூழலில், இந்தியாவிடம் இறங்கி வந்து உதவி கேட்கும் நிலைக்கு மாலத்தீவு அரசு தள்ளப்பட்டது. இந்திய அரசும் மாலத்தீவிற்கு சில உதவிகளை வழங்கியது.தற்போது, இலங்கையைப் போல மாலத்தீவு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. இதனால் மாலத்தீவுக்கு, சீனா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட சர்வதேச கடன் வழங்குபவர்கள் கூடுதல் உதவி வழங்க தவிர்க்கின்றனர்.அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை, இந்தியாவில் இருந்து 750 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உதவிகள் கிடைத்தாலும் அவர்களுக்கு தற்போது இருக்கும் கடனை அடைக்க போதுமானதாக இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகள் எடுத்தும், மாலத்தீவின் அந்நிய செலவாணி கையிருப்பு மிகக்குறைவாக உள்ளது.தற்போது நிலவரப்படி, கடனில், 3.4 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனாகும். குறிப்பாக சீனா அதிக கடன்களை வழங்கி உள்ளது. கடன் பிரச்னையை சமாளிக்க, அதிபர் முய்சு, அமைச்சர்களை வளைகுடா நாட்டிற்கு உதவி கேட்டு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த நாடுகள் இதுவரை உதவிகள் செய்ய முன்வராமல் கை விரித்து விட்டனர்.வரும் 2029ம் ஆண்டிற்குள் 11 பில்லியன் டாலர்களாக கடன் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் வரும் ஆண்டுகளில் மாலத்தீவு திவால் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.புதிய வரிகள்ஜி.எஸ்.டி.,யை 16% லிருந்து 17% ஆக உயர்த்தியும் , சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரித்தும், சுற்றுலா துறையில் புதிய வரிகளை விதித்தும் மாலத்தீவு அரசு வருவாயை அதிகரிக்க முயற்சிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

orange தமிழன்
மார் 15, 2025 16:17

இந்த நிலைமை தமிழகத்திற்கு வராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்....(இன்னும் ஒரு வருடத்திற்குள் நம் கதையை தீயமுக முடிக்காமல் இருக்குமா?)


தேவராஜன்
மார் 15, 2025 14:19

நமது பாரதப் பிரதமரை இஸ்ரேலின் கைக்கூலி என இவரது அமைச்சர்கள் சிலர் கூறுகியதாக ஞாபகம். நன்றி கெட்ட ஜென்மங்கள். நம்மிடமே உதவி பெற்றுக் கொண்டு நமக்கே குழி பறிக்கும் குள்ள நரிகள்.


RAMAKRISHNAN NATESAN
மார் 15, 2025 23:05

கடைபிடிக்கும் மார்க்கம் அப்படிப்பட்டது ..... உலகெங்கிலும் உதாரணங்கள் உண்டு .......


Kanns
மார் 15, 2025 11:31

Purchase Maldives & Settle Pagans-Hindus there As Before Islamic Expansions


கண்ணன்
மார் 15, 2025 08:31

ஏதோ பாகிஸ்தானுக்கு ஒரு ஃபோன் போட்டாலே போதும் என்றார்களே! அதைச செய்யவேண்டியதுதானே!


Karthik
மார் 14, 2025 22:17

தமிழ்நாட்டுக்கும் இதே நிலை கூடிய விரைவில் வரப்போகிறது. அதனால்தான் திருடர்கள் முன்னேற்ற பார்ட்டி லீடர்களின் வாரிசுகளுக்கு மட்டும் மும்மொழி கல்வியும், 3வது / 4வது மொழியாக வெளிநாட்டு மொழியும் படிக்கின்றனர். குடும்பத்தோட வெளிநாட்டுல சொகுசா வாழ தேவப்படுமே


Yes your honor
மார் 14, 2025 23:04

இனி என்ன புதிதாக இந்த நிலை தமிழ் நாட்டிற்கு வருவதற்கு. ஏற்கனவே கரண்ட் பில், சொத்துவரி, பதிவுக் கட்டணம் என்று ஒவ்வொன்றாக கழுத்தை இறுக்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள் ஆட்டை மட்டும் ஆயிரம் கோடிகளிலிருந்து இலட்சம் கோடிகள் என்று பெருகிவிட்டது. இவர்கள் ஆட்டையைப் போடுவது யார் அப்பன் வீட்டுப் பணம். எல்லாம் என் பணமும், உங்கள் பணமும் தான். எப்பொழுதான் விடியுமோ, 2026 சிக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும்.


B MAADHAVAN
மார் 14, 2025 22:11

வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். நம் பாரத தேசத்திற்கு எதிராக செயல்படும் எவரும், எந்த நாடும் இறுதியில் கஷ்டப் படக்கூடிய சூழ்நிலை தான் உருவாகும். பாரத மாதாவிற்கு அப்படி ஒரு சக்தி. நம் நாட்டில் உள்ள தேசத் துரோகிகளுக்கும் இது பொருந்தும். பாரத் மாதா கீ ஜெய்.


ராமகிருஷ்ணன்
மார் 14, 2025 22:05

பேசாம திமுக அமைச்சர்கள், உதைநிதி அல்லது மாறன் பிரதர்ஸ் சிடம் நல்ல விலைக்கு விற்று விடுங்கள். செந்தில் பாலாஜி 10 ரூபாய் எச்சா கொடுத்து வாங்கி கொள்வார்.


சிவம்
மார் 14, 2025 22:05

இவங்களுக்கு எலும்பு துண்டு போட்டு மொத்த நாட்டையும் இராணுவ தளவாடங்களை இறக்க பயன்படுத்த சீனன் வரலியே. என்ன ஆச்சு.


தமிழன்
மார் 14, 2025 21:48

ஆளும் மண்டையும் பேர பாரு, மொய்சு பைல்சு கொசு என்று எனக்கு ஹைடெக் திருடன்களையும் 2 திருட்டு முன்னேற்ற கழகங்களையும் பிடிக்காதுதான் ஆனால் நாடு என்று வரும் போது என் நாட்டை நான் விட்டுக் கொடுக்க முடியாது சீனா காலில் போயி விழு அவனுடைய உண்மையான நரித்தனம் புத்தி இப்போ காட்டுவான் .இந்தியா ஓரு கீரை கட்டு கூட இவனுகளுக்கு கொடுக்க கூடாது சாகட்டும் இப்போது உதவிக்கு பிச்சை கொடுக்க இந்தியா வேணுமா?? கடல் தண்ணிய குடிங்கடா அப்பவாவது அறிவு வருதான்னு பார்ப்போம்


Barakat Ali
மார் 14, 2025 21:36

தமிழ்நாட்டுக்கும் இதே நிலை கூடிய விரைவில் ......