உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனில் இருந்து படைகளை திரும்ப பெறணும்: ரஷ்யாவை வலியுறுத்தி ஐ.நா.,வில் தீர்மானம் நிறைவேற்றம்

உக்ரைனில் இருந்து படைகளை திரும்ப பெறணும்: ரஷ்யாவை வலியுறுத்தி ஐ.நா.,வில் தீர்மானம் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே, 2014 முதல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், 2022 பிப்., 24ல் உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா துவங்கியது. போர் மூன்றாண்டுகளாக நீடித்து வருகிறது. மூன்றாம் ஆண்டு நிறைவடைந்த நாளான நேற்று, பல்வேறு உலக தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வில் குவிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8pbu04nf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், தங்கள் முயற்சிகளை மறு ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில், 27 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாட்டை, மார்ச் 6ல் நடத்த உள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஐ.நா.,வில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதற்றத்தைக் குறைக்கவும், போர் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறுத்தவும், உக்ரைனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் எதிராகவும் ஓட்டளித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உட்பட 63 நாடுகள் இந்த ஒட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kanns
பிப் 25, 2025 11:34

UN acting Only After Trumfs US-Russia Saudi Talks. UN is Useless& Wasteful Expenditures Besides Becoming Stooge of Communists& Islamic Fundamentalists. Better Abolish


ஆரூர் ரங்
பிப் 25, 2025 11:28

நீட் விலக்கு தீர்மானத்தை நிறைவேற்றியது போல.


Anand
பிப் 25, 2025 11:01

இந்த தீர்மானத்தால் ரஷ்யா பயந்து நடுநடுங்கி வெலவெலத்து போய் ஐநா சபையின் காலில் விழுந்து மன்னிக்கும்படி மன்றாடி வேண்டிக்கொண்டு படைகளை திரும்ப பெற்றுக்கொள்ளும்......


சந்திரசேகரன்,துறையூர்
பிப் 25, 2025 08:52

ஐநா சபையை எந்த நாடும் மதிப்பதில்லை அது ஒரு பல்லில்லாத பாம்பு பேசாமல் ஐநா சபையை கலைத்து விடலாம்.


MUTHU
பிப் 25, 2025 08:46

அய்யகோ. ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டுடுச்சி. போச்சு. போச்சு. இனி ரஷ்யாவிற்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ தெரியலையே. சில நாடுகளுக்கு மட்டும் வீட்டோ பவர் கொடுத்துள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை வெறும் ஆட்டுக்கு தாடி தான். இதில் என்ன பாரபட்சம் என்று தெரியவில்லை.


Va.sri.nrusimaan Srinivasan
பிப் 25, 2025 07:47

நல்லது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை