உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் மீண்டும் தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் மீண்டும் தாக்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி ஹேக்: அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால்தான் ஈரான், இஸ்ரேல் இடையிலான போர் முடிவுக்கு வந்தது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அவர்களால் நீண்ட காலம் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாது. பல தசாப்தங்களுக்கு அவர்களின் அணுசக்தி திட்டங்கள் பின்னடைவை சந்தித்து உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8sazp9co&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஹிரோஷிமா, நாகசாமி ஆகியவற்றை உதாரணமாக பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், தற்போதும் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் தான் போர் முடிவுக்கு வந்தது.பாலஸ்தீனத்தின் காசாவில் வளர்ச்சி காணப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக மேற்கு ஆசியாவில் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும் அவர், ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டங்களை தொடர்ந்தால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்றார்.முன்னதாக, அமெரிக்காவின் தாக்குதலால், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வெளியான தகவலை மறுத்த அதிபர் டிரம்ப், அது பொய்ச் செய்தி. அணுசக்தி கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஜூன் 25, 2025 20:06

டிரம்ப் மீண்டும் தாக்குதல் வேலையில் இறங்கினால், கொடுக்கப்படும் நோபல் பரிசு பிடுங்கப்படும்.


True Indian
ஜூன் 25, 2025 18:10

சரிங்க சார் . உங்களுக்கு நோபல் பரிசு தயார்.


Ravi Prasad
ஜூன் 25, 2025 17:18

Because of him only ‘Sun’ is rising every morning


Anand
ஜூன் 25, 2025 16:53

நீ உண்மையிலேயே வீரனாக இருந்தால், இதே போல ரஷ்ய மீது தாக்குதல் நடத்தி ரஷ்ய உக்ரைன் போரை நிறுத்து பார்க்கலாம்.


Senthoora
ஜூன் 25, 2025 16:51

நான் என்று தட்பெருமை இவருக்கு. நினைத்து பார்க்கமுடியாத முடிவு ஈரான் கட்டாரில் இருக்கும் உங்கள் இராணுவ தலத்தில் நடத்திய தாக்குதலின் எதிரொலி, போர் தட்காலிகமாக ஓய்ந்து இருக்கு,


Anand
ஜூன் 25, 2025 16:50

செத்த பாம்பை அடித்த மாவீரன்...


V K
ஜூன் 25, 2025 16:32

இந்த கொசு தொல்லை தாங்க முடியல சீக்கரம் ஒரு நோபல் பரிசு மற்றும் ஆஸ்கார் பரிசும் இந்த பெருசுக்கு கொடுத்து அனுப்புங்கோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை