உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மீதான தாக்குதலின் தொடர் நடவடிக்கை: முக்கிய நகரங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்திய அமெரிக்கா

ஈரான் மீதான தாக்குதலின் தொடர் நடவடிக்கை: முக்கிய நகரங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்திய அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக, முக்கிய நகரங்களை அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கி உள்ளது.ஈரான்-இஸ்ரேல் போர் இப்போது அமெரிக்காவின் தலையீட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்ற சூழலை உருவாக்கி உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ள அமெரிக்கா, ஈரானை சரண் அடையுமாறு கூறி இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pxcqdrzd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் ஈரான் அதை பொருட்படுத்தாத நிலையில், பங்கர் பஸ்டர் (BUNKER BUSTER) வகை குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. பர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி இருக்கிறது.அமெரிக்காவின் தாக்குதல் எதிரொலியாக, தற்போதுள்ள ஈரான், இஸ்ரேல் போர் சூழல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது. பங்கர் பஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கைகள் வெளியாகி உள்ளன.இந் நிலையில், முக்கிய நகரங்கள் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் வகையில், அமெரிக்கா அலர்ட் செய்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள், ஆபத்தான சூழலில் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்கும் வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளன. நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் சந்தேக நடவடிக்கைகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன. இதுகுறித்து நியுயார்க் போலீசார் கூறியதாவது: ஈரானின் மீதான தாக்குதலை அடுத்து, நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதிஉயர் எச்சரிக்கையுடன் கூடுதல் பாதுகாப்பு படைகளை கண்காப்பு பணிகளில் இறக்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை