உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டர் பைடனுக்கு அதிபர் ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கினார்.சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது, போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மகனை விடுவித்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஹன்டர் பைடனின் சிறை தண்டனையை அதிபர் பைடன் குறைக்க மாட்டார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை கூறியிருந்தது. இந்த நிலையில், தனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்களில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இன்று எனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளேன். நான் அதிபராக பொறுப்பேற்றது முதல் நீதித்துறையில் தலையிட மாட்டேன் என்று சொன்னபடி, இருந்து வருகிறேன். வீண் பழி சுமத்தி என் மகனை சிறையில் அடைத்த போதும், நான் தலையிடவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. நான் தற்போது பொது மன்னிப்பு வழங்கியுள்ளேன்,' எனக் கூறினார்.நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் கட்சி தோல்வியடைந்தது. இவர் ஜனவரி 14ம் தேதி வரையில் மட்டுமே அதிபராக இருக்க முடியும் சூழலில், மகனுக்கு அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

SUBBU,
டிச 02, 2024 19:14

இதென்ன பிரமாதம் இவருக்கு முன்னோடி வழிகாட்டி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தாரே ஞாபகம் இருக்கா? அவரது உடன் பிறந்த சகோதரர் ரோஜர் கிளிண்டன் என்பவர் அவர் கூட்டாளியுடன் போதைப்பொருள் கடத்தியதாக FBI யால் கைது செய்யப் பட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அப்போது இதே போன்றுதான் நம்ம பில் கிளிண்டன் தனது சகோதரருக்கு பாவ மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்தார்.


kalyan
டிச 02, 2024 13:56

இனி டிரம்ப் தனக்கு எதிராக தீர்ப்பு வந்த இருக்கும் எல்லா வழக்குகளிலிருந்தும் விற்க பொதுமன்னிப்பு தமக்குத்தாமே வழங்கிக் கொள்ளலாம். மோடி முயற்சித்தால் அதானி யையும் வழக்கிலிருந்து விடுவிக்கலாம், அதானி டாலரில் தானே விற்க முயன்றார்? BRICS நாணயத்தில் அல்லவே ?


Mani . V
டிச 02, 2024 13:54

அங்கும் மாடல் அரசுதான் போலும். அயோக்கியத்தனம் செய்யவும் வசதி, வாய்ப்பு தேவை போலும்.


Neelachandran
டிச 02, 2024 13:40

எந்த நாடாக இருந்தால் என்ன உறவினருக்கு சலுகை வேலை செய்கிறது.வாழ்க ஜனநாயகம்.


M Ramachandran
டிச 02, 2024 13:13

ஹிஸ் ப்ரெசிடென்ட்டியல் பவர்


Ganapathy
டிச 02, 2024 12:52

குத்புதீன், அதேமாதிரி காஸா பிரச்சனையை அங்குள்ள மக்களும் ஆட்சியாளர்களும் பாத்துக்குவாங்கதானே? ஏன் இங்க குந்திகினு பொங்குபொங்குன்னு பொங்குற?


Haja Kuthubdeen
டிச 02, 2024 16:21

சரி சரி...நம்ம ஆளு ட்ரம்ப் வந்ததும் திருப்பி பைடன் மகனை உள்ளே போட்டா போச்சு....


Sivagiri
டிச 02, 2024 12:02

பதவியில் இருக்கும் வரை, மகன் சிறை என்றாலும் ராஜ உபசாரம் கிடைக்கும், அதேநேரம், நீதிமானாகவும் காட்டிக் கொள்ள முடியும், பதவி போய் வேற ஆள் வந்திட்டா ராஜ உபசாரம் போகும், தப்பிக்கிறதும் கஷ்டம் . . . எல்லாம் திராவிட பார்முலாதான் . . .


hariharan
டிச 02, 2024 10:36

நான் எப்பொழுதும் நீதித்துறையில் தலையிட மாட்டேன், ஆனால் இந்த ஒரு தரம் மட்டும் ஹிஹிஹிஹி. நம்ம ஆளு ஒரு தடவை அமெரிக்காவுல மட்டுனாரு. இங்கே உள்ள தலைவர் ஒருத்தர் காப்பாற்றி விட்டார்.


Ganapathy
டிச 02, 2024 10:24

இவன் நீதிமன்ற விவகாரத்தில் தலையிடாமல் தன் அய்யோக்கிய மவனை எப்படி விடுதலை செய்தான்? இவனே காழ்புணர்ச்சி காரணமாக என யாரை குற்றவாளியாக்குகிறான்?


Haja Kuthubdeen
டிச 02, 2024 11:01

ரொம்ப உணர்ச்சி வசபடவேணாம்.இதை அங்குள்ள அமெரிக்க மக்களும்..ட்ரம்பும்தான் நல்லதா கெட்டதா என்று முடிவோ விமர்சனமோ செய்யனும்.


Ganapathy
டிச 02, 2024 10:22

இந்த உத்தம இடதுசாரிதான் அதானியை குற்றம் சுமத்த தனது ஆதரவு நீதிபதியைப் பணித்தவன். காங்கிரஸ் திராவிடிய இடதுசாரிகளின் அய்யோக்கிய திராவிட மாடல் அரசியல் அமெரிக்க மண்ணிலும் நடக்கிறது.


சமீபத்திய செய்தி