உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா

இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 300 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.

கடத்தல்

பல வரலாற்று சிறப்பு மிக்க நாடான இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். இதனையடுத்து அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட சிலைகளை பல நாடுகள் பறிமுதல் செய்து வைத்துள்ளன. அவற்றை திரும்ப பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்கா அரசு பல சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்து உள்ளது.

ஒப்படைப்பு

தற்போது பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 297 பழங்கால சிலைகளை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளது. அந்த வகையில் 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 578 சிலைகள் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளன. சிலைகளை இந்தியாவிடம் திருப்பி கொடுத்ததில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.டெலவாரே நகரில் இந்த சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இங்கு தான் அதிபர் டைபனும், பிரதமர் மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தனர். பிறகு, இந்த சிலைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, முறைப்படி இந்த சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நன்றி

இதற்கு அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இது, கலாசார இணைப்பை ஆழப்படுத்துவதுடன், கலாசார சொத்துகள் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துகிறது. விலை மதிப்பு இல்லாத 297 சிலைகளை திருப்பி கொடுத்ததற்காக அமெரிக்காவிற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், ஒப்படைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து திருடப்பட்டு உள்ளன. இந்த சிலைகள் கற்கள், மெட்டல், மரம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்டவை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
செப் 22, 2024 18:57

அடேங்கப்பா, தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு திருப்பிக் கொடுத்ததே இவ்வளவு என்றால் ஆட்டையைப் போட்டது எவ்வளவு இருக்குமோ?


Rasheel
செப் 22, 2024 14:31

வெளி நாடுகளில் போய் இந்தியாவை தவறுதலாக பேசும் கோமாளிகளை பற்றி என்ன செய்வது.


Anonymous
செப் 22, 2024 17:52

பண்டமாற்று முறையில், சிலைகளுக்கு பதிலா, வெளிநாட்டில் போய், நம் நாட்டுக்கு எதிராக பேசுற நம்ம பாராளுமன்றத்தின் எதிர் கட்சி தலைவர், அவருடைய உடன்பிறவா சில ,பல ஆட்களை அமெரிக்கா ம்யூசியம் ஒன்றிற்கு கொடுத்து விட்டு வரலாமே? அவங்களுக்கும் இப்படி பட்ட ஜந்துக்களை பார்க்க , நல்ல பொழுது போக்காவும் இருக்கும்.


Muthu Kumar
செப் 22, 2024 13:22

இங்குள்ள திராவிட கட்சிகளுக்கு திருடா தான் தெரியும் நாட்டுப்பற்று உள்ள மோடி ஜிக்கு வாழ்க


ஆரூர் ரங்
செப் 22, 2024 12:10

அன்னிய நாடுகளிலிருந்து சிரமப்பட்டு திரும்பப் பெறப்படும் சிலைகளில் பல எந்தெந்த ஆலயங்களுக்கு சொந்தானவை என்பதே தமிழக அறநிலையத்துறைக்குத் தெரியவில்லை. ஏனெனில் பல்லாண்டுகளாக ஆலயங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளன என்று கூறும் துறையிடம் பெரும்பாலான ஆலயங்களது விக்கிரகங்கள் நகைகள், படங்கள், அசையாச் சொத்துக்கள் பற்றிய ஆவணங்கள் இல்லவே இல்லை. நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இருந்த இடமே தெரியவில்லை. ஆலய அர்ச்சகர் அல்லது பக்தர்கள் திருட்டு பற்றி புகாரளித்தாலும் தேட முடிவதில்லை. இப்படிப்பட்ட துறை எதற்கு? அரசியல்வாதிகள் ஆட்டையைப் போட மட்டுமா?


Ramesh Sargam
செப் 22, 2024 12:04

வொவொரு முறை மோடி அவர்கள் எந்த வெளிநாடு சென்றாலும் அங்கு நம் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட பொருட்களை திரும்ப கொண்டுவருகிறார். ஆனால் அந்த ராகுல் இருக்கிறாரே, இந்தியாவைப்பற்றி இல்லாததையும், பொல்லாததையும் கூறி இந்தியாவுக்கு அவப்பெயர் கொண்டுவருகிறார்.


naranam
செப் 22, 2024 11:39

மோடிஜியால் மட்டுமே இது சாத்தியமாகிறது.


முக்கிய வீடியோ