உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதிப்புயல், காட்டுத்தீ காரணமாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதிப்புயல், காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மிசோரி, அர்கன்சாஸ் மற்றும் கன்சாஸ் ஆகியவை மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மிசோரியில், இரவு முழுவதும் சூறாவளி தாக்கி, வீடுகளை இடித்து தரைமட்டமாகியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையில், டெக்சாஸில், புழுதிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்துகளில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். புயல்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மேலும் பேரழிவை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். புயல் அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்களை ஆபத்தில் தள்ளி உள்ளது. இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மார் 16, 2025 12:15

ட்ரம்பால் இயற்கையின் மீது தடை விதிக்கமுடியுமா?


Oru Indiyan
மார் 16, 2025 12:05

டிரம்ப் வந்ததில் இருந்து ஆரம்பித்தது சனி. பல விமான, கார் விபத்துக்கள். பல இயற்கை சீற்றங்கள்.. இறைவன் இப்போதெல்லாம் அன்றே கொல்கிறார் போலும்.


Chandrasekaran Balasubramaniam
மார் 16, 2025 10:13

பிற நாடுகள் மீது தேவையில்லாமல் சகுனி வேலை செய்து மறைமுக போர் ஐ தூண்டினால் இப்படித்தான் பேரழிவு உண்டாகும். பாவம் மக்கள். ஆளும் அரசின் அயோக்கிய தனத்தால் மக்கள் துன்பம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை