உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாணவர் விசா நேர்காணல் நிறுத்தியது அமெரிக்கா

மாணவர் விசா நேர்காணல் நிறுத்தியது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்தி வைக்கும் படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, கடந்த ஆண்டு அமெரிக்க பல்கலைகளில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. விசா கோரியுள்ள மாணவர்களின், 'பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக்' சமூகவலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதில் பயங்கரவாத ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு பதிவுகள் காணப்பட்டால், அவர்களின் விசா மறுக்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
மே 29, 2025 12:59

அடுத்து அங்கு பணியில் இருக்கும் வேற்றுநாட்டவர்களுக்கும் பிரச்சினைதான். ட்ரம்ப் பிரச்சினை கொடுப்பதற்கு முன்பே வேற்று நாட்டவர்கள் அவரவர் தாய் நாட்டுக்கு செல்வது உகந்தது. அல்லது வேறு எந்த நாட்டில் நல்ல எதிர்காலம் உள்ளதோ அங்கே சென்று பணியில் சேர்வது உகந்தது. டிரம்ப் ஒருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.


Sundar
மே 29, 2025 10:52

ஆஸ்திரேலியா சென்று மிஸ் முடித்த ஒருவரை பணியில் அமர்த்த நேர்ந்தது. அடிப்படை புரிதல்கள் கூட இல்லாமல் அவரது துறை பணிகளை முழுவதுமாக தடம் புரட்டினார். விளைவு ISO சான்றிதழ் காலி. பின், வேலையில் இருந்து விலக்க பட்டார்.


Kasimani Baskaran
மே 29, 2025 03:51

அமெரிக்க மண்ணில் இருந்து கொண்டு அவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக போராடுவது, படிப்பதைத்தவிர தீவிரவாதிகளுக்கு ஆதரவு போன்ற காரியங்களில் ஈடுபடுவது சட்டவிரோதம். யூத எதிர்ப்பு, தீவிரவாத ஆதரவு சிந்தனை போன்றவை ஹார்வர்டில் சர்வசாதாரணம். ஆகவே அமெரிக்க அரசு 100% செய்தது சரிதான். வின்சி போன்றோர் கூட அங்கு சென்று இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை சொல்ல முடியும்.


மீனவ நண்பன்
மே 29, 2025 03:08

கட்டுப்பாடுகள் தேவை தான் ..வேலை கிடைக்கும் என்கிற நப்பாசையில் தான் MS படிக்க வராங்க ..நிறைய பல்கலைக்கழகங்களில் 50% வரை இடங்கள் காலி ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை