உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன மாணவர்கள் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி முடிவு

சீன மாணவர்கள் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் சில சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யப் போவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹாவர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதித்தார். இந்த உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், அமெரிக்காவில் படிக்க விசா கோரி விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கான நேர்காணலை அந்நாட்டு வெளியுறவுத்துறை நிறுத்தி வைத்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் படிக்கும் சில சீன மாணவர்கள், குறிப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருப்பவர்கள், சில முக்கிய துறைகளில் கல்வி பயில்பவர்களின் விசாக்களை ரத்து செய்வதில் தீவிரம் காட்டப் போவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2023 - 24ல், 2,70,000 சீன மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை