மேலும் செய்திகள்
தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்
5 hour(s) ago | 6
கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு
11 hour(s) ago
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் கூறியபடி தினமும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார். உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை, டான்பாஸ் பகுதியை ரஷ்யாவுக்கு கொடுத்து விடுவது, உக்ரைன் ராணுவ பலத்தை குறைப்பது என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. டிரம்ப்பின் இந்தப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே கூறியிருந்தார். ஆனால், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு நடவடிக்கைகள் மீதான நன்றியை உக்ரைன் மறந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியிருந்தார்.உக்ரைன் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது; இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 28 அம்சங்கள் அடங்கிய அமைதி திட்டம், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ஏற்கும் விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள கருத்து வேறுபாடுகள் தீர்க்க முடியாதவை அல்ல. அதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும். இந்த அமைதி திட்டம் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், ரஷ்யா மற்றும் உக்ரைனின் இசைவு இல்லாமல் தயாரிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 6
11 hour(s) ago