உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 100 கிராம் வெயிட் கூடிருச்சாம்!: வினேஷ் பதக்க வாய்ப்பு பறிபோனது: இந்தியர் இதயம் இடிந்துபோனது!

100 கிராம் வெயிட் கூடிருச்சாம்!: வினேஷ் பதக்க வாய்ப்பு பறிபோனது: இந்தியர் இதயம் இடிந்துபோனது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய இந்தியாவின் வினேஷ் போகத், பைனலுக்கு முன்னேறியதால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியான நிலையில், தற்போது அவர் 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று (ஆக.,6) நடந்த மல்யுத்த போட்டியில், பெண்களுக்கான பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் விளையாடினார். வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் வினேஷ் போகத், முதன்முறையாக இப்பிரிவில் பங்கேற்றார். கியூபாவின் லோபசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன்மூலம் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lusdwysf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், பைனலுக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 50 கிலோ பிரிவில் விளையாடும் வினேஷ் போகத் 100 கிராம் அளவிற்கு எடை கூடியதால், ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது; பைனலுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்படுகிறது. இப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்ற நிலையில், வெள்ளி அல்லது தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வினேஷ் 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 'வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது' என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

இதனிடையே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் கடுமையாக பயிற்சி செய்த வினேஷ் போகத் 1.85 கிலோ வரை எடை குறைத்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனாலும், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடுமையான பயிற்சி காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மருத்துவமனையில் வினேஷ் போகத் சுயநினைவின்றி உள்ளதாக அவரது பெரியப்பாவும், பயிற்சியாளருமான மகாவீர் சிங் போகத் கூறியுள்ளார்.

மேல்முறையீடு

வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரத்தில் வழிமுறைகளை பின்பற்றி என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்கவும், ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தினார். இதனையடுத்து, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.

புறக்கணியுங்கள்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம்ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங், 'ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். மல்யுத்த பயிற்சியாளர் மகாவீர் சிங் கூறுகையில், 'மத்திய அரசு தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Kasimani Baskaran
ஆக 08, 2024 05:23

பயிற்சிக்காலத்தில் எடை அதிகரிப்பதை கவனத்தில் கொள்ளாமல் விதி முறைகளை தவறு என்று சொல்வதைப்போல கோமாளித்தனம் வேறு ஒன்றும் இல்லை.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 08, 2024 05:16

இது இவரின் மூன்றாவது ஒலிம்பிக் ஒட்டி.. போட்டியின் விதிகள் இவருக்கும் இவரது மேலாளருக்கு மிக நன்றாக தெரிந்து இருந்தும் எச்சரிக்கை இல்லாமல் நடந்துகொண்டது இவர்களின் தவறு. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புள்ளி வைத்த கூட்டணியின் கொத்தடிமை திருட்டு திராவிடர்கள் அவிழ்த்துவிடும் பொய்கள் கட்டுக்கங்காமல் போகின்றன.


தாமரை மலர்கிறது
ஆக 08, 2024 01:54

தேசப்பற்றாளர் பிரிஜ் பூஷன் தலைவராக இருந்தால், ஐந்து தங்க பதக்கங்கள் கிடைத்திருக்கும். கடுமையாக வேலை வாங்குகிறார் என்ற கடுப்பில் அவர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை இந்த பெண்கள் வீசினார்கள். இப்போது ஒரு மெடலும் வாங்கமுடியவில்லை.


v j antony
ஆக 07, 2024 23:29

50 கிலோ எடை பிரிவு என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது இதில் வீரரின் கவனம் மாறியுள்ளது இதில் விதிகளை மீற வலியுறுத்துவது தேவையற்றது ஒரு தங்கத்திற்க்காக நம் நாடு தவம் இருக்கும் நிலையில் இருப்பது தான் வருத்தத்திற்குரியது விளையாட்டு துறை இந்தியாவில் கிரிக்கெட் மட்டும் தான் என்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது


xyzabc
ஆக 07, 2024 22:24

Very unfortunate. Looks like medals are not meant for India. Lost 5 bronze by finishing 4th.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 22:12

ஒலிம்பிக் மோதி ஜி கட்டுப்பாட்டில் இருந்தால் இந்நேரம் தினம் ஒரே ஒரு தங்க மெடலாவது கிடைத்திருக்கும். INDI அறிவிலிகள் பிரச்சாரம் செய்வதில் உண்மைக்குப் பஞ்சம்


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 07, 2024 22:05

கவலைப்படாதீர்கள் சகோதிரி. இந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டை இந்தியா புறக்கணிக்கணும். நேற்று ஹாக்கி விளையாட்டில் நமது விளையாட்டு வீரர்களிடம் refree நடந்து கொண்ட விதம் கேவலமாக இருந்தது. போன தடவையும் ஒரு பெரிய பிரச்னை செய்து தான் பதக்கம் கொடுத்தார்கள்.என்னை பொறுத்தவரை இது ஒரு தேவை இல்லாத ஆணி.


Google
ஆக 07, 2024 20:33

பழி வாங்கத்தான் செய்யும்.


ஆசாமி
ஆக 07, 2024 18:52

இதுக்கும் மோடிதான் காரணம்னு ஒரு வெட்டி்கும்பல் கம்பு சுத்தும்.ஏற்கனவே 2016 இதே் அம்மணி எடை கூடுதல்னு போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.


வல்லவன்
ஆக 07, 2024 17:28

பிரஜித்பூஷன் அரசியல் இது bjp ஆட்கள் பலி வாங்கிவிட்டார்கள்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ