உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இறுதி கட்டத்தில் போர்: இன்னமும் நம்புகிறார் உக்ரைன் அதிபர்

இறுதி கட்டத்தில் போர்: இன்னமும் நம்புகிறார் உக்ரைன் அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''ரஷ்யா உடனான போர் இறுதிக்கட்டத்தில் உள்ளது,'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் உக்ரைன் திணறினாலும், பிறகு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் பல ஆயிரகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்துள்ளார். அங்கு அதிபர் ஜோபைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை சந்தித்து 'வெற்றி திட்டம் ' குறித்த அறிக்கையை அளிக்க உள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாம் நினைத்ததை விட அமைதியை நோக்கி நெருங்கி உள்ளோம். போரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம். நாங்கள் வலிமை பெற்றுள்ளோம்.வெற்றி திட்டம் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட கூடாது. இது உக்ரைனை வலிமைப்படுத்தி உள்ளோம். இதற்காக தான் நட்பு நாடுகளிடம் எங்களை வலிமைபடுத்த வேண்டும் என கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shyamnats
செப் 24, 2024 22:57

இறுதி கட்டத்தை நெருங்குகிறது - யாருடையது என்று அவர் சொல்லவில்லையே ?


Barakat Ali
செப் 24, 2024 20:44

உங்களை வெச்சு அமெரிக்கா விளையாடுது .......... அதை உணரமுடியல ........


அப்பாவி
செப் 24, 2024 17:13

நம்மாள்தான் காரணம். அமுக்குடா ஹாரனை. குத்துடா மெடலை.


முக்கிய வீடியோ