உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மனித குலம் சந்திக்கும் சவால் குறித்து ஆலோசித்தோம்: ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பேட்டி

மனித குலம் சந்திக்கும் சவால் குறித்து ஆலோசித்தோம்: ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வியன்னா: ‛‛ மனித குலம் சந்திக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மிகப்பெரிய சவால்கள் குறித்து ஆஸ்திரியா சான்சிலருடன் ஆலோசனை நடத்தப்பட்டது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அந்நாட்டு இசைக்கலைஞர்கள், நமது தேசிய கீதத்தை இசைத்து மோடியை வரவேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ybnwexz0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்நாட்டு சான்சிலர் மாளிகைக்கு வந்த மோடியை, சான்சிலர் கார்ல் நெஹமர் வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.அப்போது, கார்ல் நெஹ்மர் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதுடன், ஐரோப்பிய கவலைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து இந்தியாவிடம் தெரிவிப்பது எனது கடமை. மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஆலோசித்தோம். இந்தியா ஒரு செல்வாக்கு பெற்ற நாடு. ரஷ்யா - உக்ரைன் இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது.இவ்வாறு அவர் கூறினார்.பிறகு பிரதமர் மோடி கூறியதாவது: எனது 3வது ஆட்சி காலத்தில் ஆஸ்திரியா வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போருக்கான நேரமல்ல என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட மனித குலம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசித்தோம். பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு கூட்டணியுடன் இணைந்து ஆஸ்திரியா பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்க முடியாது. அதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்ற உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

radha
ஜூலை 10, 2024 20:27

எங்க தலைவரே ? மணிப்பூர்லயா ?


special vidiyal model adimay
ஜூலை 10, 2024 20:58

ஆமா வேங்கை வயல், கள்ளக்குறிச்சில


hari
ஜூலை 10, 2024 22:18

உன் டாஸ்மாக் அறிவிக்கு அது புரியாது உபிஸ் தொண்டரே


sriraju
ஜூலை 10, 2024 17:15

இரண்டு சவால்களுக்கும் முடிவு கட்ட வேண்டியது முக்கியம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ