உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  உரிய பதிலடி தருவோம்: அதிபர் மசூத் சூளுரை

 உரிய பதிலடி தருவோம்: அதிபர் மசூத் சூளுரை

டெஹ்ரான்: “ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி தராமல் ஓயமாட்டோம்,” என, அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். இது குறித்து, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நேற்று கூறியதாவது: கமேனியை படுகொலை செய்தது முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான போர். இதற்கு அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உரிய பதிலடி தராமல் ஓய மாட்டோம். இந்த குற்றத்தை செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி தருவோம். இது, முஸ்லிம் நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையாக தாக்குவோம்!

ஈரான் ப தில் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என கூறுகிறது. அவ்வாறு தாக்குதலை ஈரான் அதிகரித்தால், பதிலடி பயங்கரமாக இருக்கும். இதுவரை கண்டிராத அளவுக்கு தாக்குதலை தீவிரப்படுத்துவோம். - டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்

ஒன்றுபட வேண்டும்!

ஈரானின் இலக்குகளை தாக்கி அழிப்போம். அந்நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டிய தருணமிது. பயங்கரவாத ஆட்சியை துாக்கி எறிய அனைவரும் ஒன்றுபட வேண்டும். - பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை