உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.எஸ்., பயங்கரவாதிகளை விட மாட்டோம்; அதிபர் பைடன் ஆவேசம்

ஐ.எஸ்., பயங்கரவாதிகளை விட மாட்டோம்; அதிபர் பைடன் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஐ.எஸ்., பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்' என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவின் லுாசியானா மாகாணம் நியூ ஓர்லென்ஸ் நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது, வாகனம் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர், முன்னாள் ராணுவ வீரர் சம்சுதீன் ஜாபர் என்றும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன், சம்சுதீன் ஜாபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் வீடியோக்களை போலீசார் மீட்டுள்ளனர். இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், ஜோ பைடன் கூறியதாவது: ஐ.எஸ்., பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அமெரிக்காவில் பாதுகாப்பான சூழலை உணர மாட்டார்கள். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். நியூ ஆர்லியன்ஸில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் குறித்து எப்.பி.ஐ., அதிகாரிகள் எனக்கு விளக்கம் அளித்தனர். தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டார். தாக்குதலுடன் தொடர்புடையதாக இருக்கக் கூடிய வெளிநாட்டு அல்லது உள்நாட்டு தொடர்புகள் குறித்து உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAJ
ஜன 03, 2025 12:35

ஆமா ஆயுதம் கொடுத்து அடுத்த நாட்டை அழிச்சுப்புட்டு,,, இப்போ பின் பக்கம் இரத்தம் புடுங்கிட்டு அடிச்சா... வலிக்குது ... இருக்குடி இன்னும் பெரியண்ணா.... ..


Kumar Kumzi
ஜன 03, 2025 12:04

கற்கால புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு மூர்க்கனும் பயங்கரவாதியாகிறான்


vijay
ஜன 03, 2025 09:11

ஐசிஸ் போன்ற இயக்கங்களை வளர்த்து, தனக்கு வேண்டாத, தன்னுடைய பொருளாதார மற்றும் டாலர் வளர்ச்சிக்கு ஒத்துழைக்காத மற்றொரு நாட்டை குலைப்பது அமெரிக்காயாவின் கைவந்த கலை. உதாரணம் பின் லாடன் போன்றோரை உருவாக்கி வளர்ந்ததே அமெரிக்காதான்.


N.Purushothaman
ஜன 03, 2025 08:48

ஒரு முன்னாள் ராணுவ வீரர் எப்படி அடிப்படைவாத சிந்தனைக்கு மூளை சலவையானார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள் ... வேறு யாரேனும் அவ்வாறு உள்ளனரா என்பதையும் கண்டறியுங்கள் ....ஈரானை எதிரி என்று மார்தட்டி கொண்டு இருக்கும் வேளையில் அதே ஈரான் உங்கள் நாட்டு பிரஜையை வைத்து நாச வேலை செய்தால் நிலைமை இன்னும் மோசமடையும் ...


பேசும் தமிழன்
ஜன 03, 2025 08:46

மார்க்க ஆட்கள் அத்தனை பேருமே.. ISIS மனநிலையில் இருப்பவர்கள் தான்.. அப்படி கண்காணிக்க வேண்டும் என்றால் அத்தனை பேரையும் கண்காணிக்க வேண்டும்.


அப்பாவி
ஜன 03, 2025 08:38

இன்னும் வீட்டுக்கு போகலியா? மகா கண்ராவியான ஆட்சி.


அப்பாவி
ஜன 03, 2025 08:37

இந்த தாக்குதலெல்லாம் இஸ்ரேல் கொன்று குவிக்கும் பாலஸ்தீனர்களுக்கான பழிவாங்கல் செயலாகத் தெரிகிறது. உலகில் மூன்று மதங்கள் ஒழிந்தால் போதும் அமைதியாயிடும்.


vijay
ஜன 03, 2025 09:01

எந்தெந்த மூன்று மாதங்கள் என்று பட்டியலிடுங்க.


Duruvesan
ஜன 03, 2025 09:09

மூரக்ஸ் ஒரு மதம் அழிந்தால் போதும்


rasaa
ஜன 03, 2025 11:41

இனிய மார்க்கம், அமைதி மார்க்கம், இந்த இரண்டு அழிந்தாலே போதும். உலகம் சொர்க்கமாகிவிடும்.


Barakat Ali
ஜன 03, 2025 08:25

பைடன்... உங்களைவிட பெரிய பயங்கரவாதி யாரும் இருக்க முடியாது ....


Kasimani Baskaran
ஜன 03, 2025 08:24

அமெரிக்காவில் குண்டு வைக்குமளவுக்கு விட்டுவிட்டு இப்பொழுது விடமாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 08:08

உங்க பிலிம் தான் இன்னும் 28 நாளில் முடிகிறதே.. அப்புறம் இதெல்லாம் என்ன? கிளைமாக்ஸ் சீனோ??


Srinivasan K
ஜன 03, 2025 08:23

Jan 20 Trump is taking over. america is paying heavily due to illegal immigrants borders opened by Biden/Obama and co Trump is fuming


raja
ஜன 03, 2025 08:33

இதோ பார்ரா கொத்தடிமை மோர்கன் அமெரிக்காவுக்கு போயிட்டான்.... இங்கே உந்தலைவன் கேடுகெட்ட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப தலைவன் டோப்பா தலையன் சீனும் இன்னும் ஒரு வருசத்துல முடிய போகுதே...


பேசும் தமிழன்
ஜன 03, 2025 08:49

நம்ம விடியல் காட்சியே முடியப் போகிறது.. அதை பார் முதலில்... அதை தான் மக்கள் அனைவருக்கும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பாட்டியின் நடவடிக்கை..அதற்க்கு ஒரு உதாரணம்.....அப்புறம் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு திண்டாட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை