உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்: பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு

இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்: பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரிட்டன்: இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடந்த பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் எதிர்ப்பு தெரிவித்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில், 'யுனைட் தி கிங்டம்' எனும் பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இப்பேரணியில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில், 26 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் கூறியதாவது: இன ரீதியான மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம். பிரிட்டன் சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு. அது நமது நாட்டின் மதிப்புகளுக்கு அடிப்படையானது.ஆனால், போலீசார் தங்கள் வேலையைச் செய்வதை தடுப்பதோ அல்லது அவர்களை தாக்குவதையோ நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Radhakrishnan Seetharaman
செப் 15, 2025 18:22

London Bridge is falling down...


visu
செப் 15, 2025 17:16

இன்னமும் உசார் ஆகலைன்னா இனி அரபு குடியேறிகள் உங்க நாட்டை ஆக்கிரமித்து கொள்வார்கள் நீங்க உங்க சுதந்திரத்துக்காக அங்க போராட நேரும்


Rathna
செப் 15, 2025 16:48

பாகிஸ்தானிய ஜிஹாதி ஒருவன் இங்கிலாந்தில் சொன்ன கருத்து எங்களுக்கு படிப்பு இல்லை. வேலையும் கிடைக்காது. ஆனால் வருட வருடம் பிள்ளைகளை பெற்று, கிறிஸ்துவ இங்கிலாந்தை மக்களை எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வைப்போம். அவன் சொன்னது நடக்கிறது. ஆப்பிரிக்காவிலும், சிரியாவிலும், பாகிஸ்தானிலும் வந்து குடியேறிய அகதி ஒரு வேலையும் செய்யாமல், குடும்ப நபர்கள் எண்ணிக்கையை பொறுத்து அரசாங்க உதவி தொகை மாதா மாதம் பெறுகிறான். இங்கிலாந்தில் வேலைக்கு போய் சம்பாதிப்பவன் சின்ன குடியிருப்பில் குடி இருக்கிறான். அகதி பிள்ளை பெறுவதின் மூலம் பெரிய பங்களா வீட்டில் குடி இருக்கிறான். அந்த வாடகை அரசாங்கம் கொடுக்கிறது. ஓசி சாப்பாடு சாப்பிட்டு விட்டு இங்கிலாந்து நாட்டு பெண்களை, குழந்தைகளை கெடுக்கும் சம்பவங்களும் பெரிய அளவில் நடக்கிறது.


sivakumar Thappali Krishnamoorthy
செப் 15, 2025 12:02

தன் வினை தன்னை சுடும் . அரசன் அன்றெய கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் .. பழமொழி மாற்ற முடியாது.


Saai Sundharamurthy AVK
செப் 15, 2025 11:50

பிரிட்டனில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட 70 சதவிகித பதவிகளில் இஸ்லாமியர்கள் தான் உள்ளனர். காரணம் அங்கு அகதிகளாக குடியேறிய இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரித்து விட்டது. மேலும் நாலைந்து மனைவியர்களை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் எல்லா சலுகைகளையும், இலவசங்களையும் சந்தடி சாக்கில் ஒவ்வொரு மனைவி பெயரிலும் கிடைக்குமாறு செய்து, எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தே சம்பாதிக்கிறார்கள். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் போகும் போது ஏதோ ஒரு ஊர்வலம் போவது போல ஜாலியாக திரிகிறார்களாம். கார், வீடு என்று சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இந்த விஷயம் அங்கு உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்துவர்களுக்கும் இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. தற்போதைய பிரதமர், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று வந்ததற்கு காரணமே இந்த இஸ்லாமிய வாக்குகள் தானாம். இந்தியர்களை பொறுத்தவரை விரட்டினால் திரும்பி வந்து விடுவார்கள். ஆனால், அந்த இஸ்லாமியர்கள் நிச்சயம் கலவரம், போராட்டம் செய்து இங்கிலாந்து நாட்டை நாசப் படுத்தாமல் விட மாட்டார்கள். அவர்களுக்கு உலகில் உள்ள எல்லா இஸ்லாமிய நாடுகளும் ஆதரவு அளிக்கும். இப்போது அங்கு கிறிஸ்துவம் ஆபத்தில் உள்ளது...! இந்தியாவில் ஆட்டம் போடும் கிறிஸ்துவ மிசினரிகள் பிரிட்டனுக்கு சென்று அந்த நாட்டை மீட்பார்களா !!!!


Tirunelveliகாரன்
செப் 15, 2025 12:23

இந்தக் கருத்து எல்லாம் மத வெறியின் உச்சகட்டம்


cpv s
செப் 15, 2025 12:41

muslim must be banned otherwise they occupy your place thenfinally kid out you


PALANIAPPAN. S
செப் 15, 2025 10:30

உலகமெங்கும் பரவி நாடு பிடித்து அத்தனை நாட்டு செல்வங்களையும் கொள்ளையடித்து சேர்த்த உங்களுக்கும், உழைத்துச் சம்பாதிப்பவர்களுக்கும் வித்தியாசம் தெரியாத கொள்ளைக்காரர்கள் நீங்கள்.


KRISHNAN R
செப் 15, 2025 10:28

அதிகாரபூர்வ.. டாகுமெண்ட் இல்லாமல் உள்ளவர் பிரச்சினை வெடித்துள்ளது


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 15, 2025 09:32

யூனியன் ஜாக் என்பது இங்கிலாந்து நாட்டின் வெள்ளை இன மக்களின் ஆக்கிரமிப்பை குறிக்கும் இனவெறி கொண்ட கொடி. அந்த கோடி பன்முகத்தன்மை, மரியாதை, அமைதியை குறிக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் சொல்வதை கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். இங்கிலாந்து செய்த மாபெரும் வரலாற்று தவறுகள் இன்று அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. இங்கிலாந்து அழிவதை உலகம் மகிழ்ச்சியுடனேயே பார்க்கும். விதி, கர்மா வலியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை