உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நடிகைக்கு பணம் தந்த வழக்கு டிரம்புக்கு என்ன தண்டனை?

நடிகைக்கு பணம் தந்த வழக்கு டிரம்புக்கு என்ன தண்டனை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: கடந்த 2016 அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகைக்கு 1 கோடி ரூபாய் தந்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் வரும் 10ல் அவருக்கான தண்டனையை அறிவிக்க உள்ளது.டொனால்டு டிரம்ப் முதன் முறையாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டி அளித்தார். இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், பேட்டி தராமல் இருப்பதற்காக, பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார். இவ்வாறு தரப்பட்ட பணத்துக்கு பொய்க்கணக்கும் எழுதியுள்ளார். இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதிபர் தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்; வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தண்டனையை அறிவிக்க உள்ளதாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அறிவித்துள்ளார்.டிரம்பின் வழக்கறிஞர்கள், 'தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும். டிரம்ப் அதிபராக பதவியேற்கவுள்ளதால், அவருக்கு உள்ள சட்டப் பாதுகாப்பின் அடிப்படையில் வழக்கை கைவிட வேண்டும்' என வலியுறுத்தினர். ஆனால், நீதிபதி இதை ஏற்க மறுத்துவிட்டார். 'டிரம்ப் 20ம் தேதி தான் பதவியேற்க உள்ளதால், 10ம் தேதி தண்டனை விதிக்க, எந்த சட்ட தடையும் இல்லை. இந்த வழக்கில் இறுதி முடிவு எட்டப்பட்டதால் தான் நீதி நிறைவேற்றப்படும்' என்று நீதிபதி கூறினார்.தண்டனை தேதிக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தை நாடி, தண்டனையை நிறுத்துவதற்கும் டிரம்ப் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Laddoo
ஜன 05, 2025 13:50

நம்மூர் த்ரவிஷன்களைப் போல திருட்டு தனமாக அங்கு அணைவி இணைவி இல்லை போலும்


RAMAKRISHNAN NATESAN
ஜன 05, 2025 10:20

இந்திய தண்டனைச்சட்டம் வேடிக்கையானது .... செ பா எப்படி முந்திரி ஆனீரு ???? என்று சமீபத்தில் உச்சம் இரண்டு முறை கேட்டுவிட்டது .... பதில் கிடைக்காததால் கேட்பதையே விட்டுவிட்டது .....


RAMAKRISHNAN NATESAN
ஜன 05, 2025 09:39

..... டிரம்ப்பு எப்பவோ கொடுத்தது அவரை இப்பவும் பதம் பார்க்காதே ???? ஒருவேளை, அது நம்ம அளவுக்கு பெரீய்ய ஜனநாயகம் இல்லீங்களா ????


RAMAKRISHNAN NATESAN
ஜன 05, 2025 09:35

இதைவிட முக்கியம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போவதுதான் .


GMM
ஜன 05, 2025 09:00

ஆபாச நடிகை. டிரம்ப் நெருக்கம். தவறாக பணம் பெறுகிறார். நீதி இதனை கவனிக்க விரும்பவில்லை. கவனித்தால் நீதி நிலை தடுமாறும். பொய், உண்மை கணக்கு நிர்வாக விவகாரமே. டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிமிடம் முதல் அதிபர். நீதிபதி தனக்கு மேல் நிர்வாக, பாதுகாப்பு அதிகாரம் உள்ளவரை தண்டிக்க முடியாது. அப்பீல் தேவையில்லை. தவறான நீதிபதியின் சிவில் உத்தரவை போலீஸ் /ராணுவம் நிறைவேற்ற முடியாது.


கிஜன்
ஜன 05, 2025 08:24

ஆபாச நடிகையை சந்தித்தது தவறா .... இல்லை அவருக்கு பணம் கொடுத்தது தவறா ? .... அங்கு கொஞ்சம் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள் போல ...


Kasimani Baskaran
ஜன 05, 2025 08:17

ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாகிவிட்டால் அவருக்கு தன்னைத்தானே மன்னித்துக்கொள்ளும் உரிமை உண்டு. அப்படி ஒரு மன்னிப்பு கூடாது என்று அந்த நீதிபதி நினைக்கிறார் போல.


Balasubramanian
ஜன 05, 2025 05:57

திருவிளையாடல் படம் இன்று எடுக்கப் படும் என்றால் டைரக்டர் அருட் செல்வர் ஏபி நாகராஜன் அவர்கள் இப்படி ஒரு வசனம் எழுதி சேர்த்து இருப்பாரோ? பிரிக்க முடியாதது? அரசியல் வாதியும் குற்றபிண்ணணியும்! சேர்ந்தே இருப்பது? தண்டனை அப்பீல் ஜாமீன்! சேராது இருப்பது? அரசியல்வாதிக்கு தண்டனை ! பரிதவிப்புக்கு? மக்கள்! பதவி ஆசைக்கு? டிரம்ப் போன்ற அரசியல் வாதிகள்! அறிவுக்கு? ஒருவரும் இல்லை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை