உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட டிரம்ப் நினைப்பதற்கு காரணம் என்ன? அமெரிக்கா புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டி: ஈரானின் முரட்டுத்தனமான, தீவிரமான அணுசக்தி நிலையங்களை அழிக்க அதிபர் டிரம்ப் துணிச்சலான நடவடிக்கை எடுத்தார். கடந்த கால அதிபர்கள் இந்த நடவடிக்கையை எடுக்க விரும்பினர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த அதிபருக்கும் அதைச் செய்ய தைரியம் இல்லை. அதிபர் டிரம்ப் தைரியமாக செய்தார். அமெரிக்கா இன்று மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட வேண்டும் என டிரம்ப் நினைக்கிறார். ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளார்.அணு ஆயுதங்களை உருவாக்கும் ஈரானின் திறனை அமெரிக்கா பறித்தது. ஈரான் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. அணு ஆயுதத்தை உருவாக்கி உலகை அச்சுறுத்தும் திறன் அவர்களிடம் இனி இல்லை. ஈரான் மக்கள் ஏன் பல ஆண்டுகளாக தங்களை அடக்கி வரும் இந்த நம்பமுடியாத வன்முறை ஆட்சியின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூன் 24, 2025 04:03

ஈரான் என்ன பாகிஸ்தானா செபாஸ் ஷெரிப்ஃக்கு பதிலாக ஆஸிம் முனிரிடம் சமாதான நோபல் பரிசை வாங்க.


Nada Rajan
ஜூன் 23, 2025 22:38

இது ரொம்ப ஓவருங்க


Raja k
ஜூன் 23, 2025 22:33

உண்மைதான் ஈரான் தற்போது தீய கொடூர சக்திகளிடம் சிக்குண்டு கிடக்கிறது, ஈரானில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், அல்லது அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்படுத்த வேண்டும்


சமீபத்திய செய்தி